பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமனின் முதல் பதிவு: நன்றியுடன் அறம் வெல்லும்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இரண்டாம் இடத்தை பெற்று வெளியேறிய பின் முதல் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
பிக்பாஸ் விக்ரமன்
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. இதில் 21 போட்டியாளர்களில் ஒருவராக இருந்து இறுதிவரை வந்து விளையாடியவர் தான் விக்ரமன்.
இவர் தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் டுவிட்டரில் சாதி, மத வெறிக்கு எதிராக அழுத்தமான கருத்துக்களை பதிவு செய்து வந்த விக்ரமன், தற்போது பிக்பாஸ் வீட்டிலும் இதையே தொடர்ந்தும் செய்து வருகிறார்.
ஆரம்பத்தில் ஏனோ தானோ என்று விளையாடிய விக்ரமன் நாட்கள் போக போக டைட்டில் வின்னர் ஆகும் அளவிற்கு வந்தவர். பிக்பாஸ் வீட்டில் எந்த போட்டியாளர்கள் என்ன தவறு செய்தாலும் அதை தட்டிக்கேட்கும் முதல் ஆளாக இருப்பார் விக்ரமன்.
இறுதியில் அசீமா? விக்ரமனா? என பேசும் அளவிற்கு வந்து பிக்பாஸில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.
முதல் வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வந்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தெரிவித்ததாவது,
அவ்வளவு அன்பும், ஆதரவும், தன்னெழுச்சியா, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் காண்பிச்சிருக்கீங்க. உங்களுக்கு மிகப் பெரிய நன்றி.
ஒரு சின்ன உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், பொங்கல் அன்று தாய்மார்கள் அவர்கள் வீட்டு வாசலில் போட்ட கோலத்தில் அறம் வெல்லும் என்பதையும் சேர்த்து போட்டிருருக்கிறீர்கள்.
இதை விட பெரிய வெற்றி நீங்கள் என்ன எனக்கு கொடுத்துவிட முடியும் என்று மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருக்கிறார். மேலும், விரைவில் அனைவரையும் சந்திப்பதாகவும் அது தொடர்பான விடயங்களை பின்னர் தெரிவிப்பதாகவும் அறிவித்து அறம் வெல்லும் என முடித்திருக்கிறார்.
உங்கள் வீட்டுப்பிள்ளையா நினைச்சு ஆதரவு கொடுத்திருக்கீங்க. தன்னெழுச்சியாக வந்த அன்புக்கு மிக்க நன்றி.??#அறம்வெல்லும் #AramVellum
— Vikraman R (@RVikraman) January 24, 2023
Will see you soon ❤️ pic.twitter.com/0IAMzmDnnf