தோனியின் ட்விட்டர் பக்கத்திற்கு நிறுவனம் வைத்த ஆப்பு.. ரசிகர்களின் ஆர்பரிப்பால் எடுத்த முடிவு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ளவர். இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக தோனி விளையாடி வருகிறார்.
இவர் தலைமையில் விளையாடி வரும் சிஎஸ்கே அணி 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தோனியின் ட்விட்டர் பக்கத்தில் வெரிஃபைடு அக்கவுண்ட் என்பதற்கான ப்ளூடிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
ஆரம்பத்தில் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இந்த தோனி, படிப்படியாக அதனை குறைத்துக் கொண்டார். எப்போதாவது தனது குழந்தையுடன் இருக்கும் போட்டோ, செல்லப்பிராணிகளுடன் விளையாடும் வீடியோ போன்றவற்றை பதிவிடுவார்.
ஆனால் அதையும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்தான் பதிவிட்டு வருகிறார். இதனால், நீண்ட நாள்களாக ட்வீட் ஏதும் செய்யாததால் ட்விட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கடைசியாக இந்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி தோனி ஒரு ட்வீட் செய்துள்ளார். தற்போது, இவரது ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால், சில மணிநேரங்களில் மீண்டும் ப்ளூ டிக் ட்விட்டர் நிறுவனம் அளிக்கப்பட்டுள்ளது.