இனி செருப்பு அணியப் போவதில்லை... விஜய் ஆண்டனியின் முடிவுக்குப் பின்னால் இப்படியொரு சோகமா!
why vijay antony avoids wearing footwear : இசையமைப்பாளர், நடிகர் எனத் திரையுலகின் இரு துறைகளிலும் தனக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் விஜய் ஆண்டனி.
இசையமைப்பாளராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய அவர், பின்னர் நடிகராகவும் பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம் திரைக்கு வரத் தயாராகி வருகிறது.

செருப்பு அணியாமல் செல்லும் விஜய் ஆண்டனி
இந்நிலையில், விஜய் ஆண்டனி தற்போது பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் செருப்பு அணியாமல் சென்று வருவதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான காரணத்தை ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் விழாவில் அவரது மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி பகிர்ந்துகொண்டுள்ளார்.

மகளின் நினைவாக எடுத்துக்கொண்ட முடிவு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா உயிரிழந்தது அவரது குடும்பத்தினருக்குப் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
அந்த இழப்பின் வலியையும் மகளின் நினைவுகளையும் மனதில் சுமந்துகொண்டிருக்கும் விஜய் ஆண்டனி, தற்போது செருப்பு அணிவதைத் தவிர்த்து வருவதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
50-க்கும் மேற்பட்ட காலணிகள்... மனதை உருக்கும் பின்னணி
இதுகுறித்து பாத்திமா கூறுகையில், மூத்த மகள் மீரா கல்லூரிக்குச் செல்வதற்காக 50-க்கும் மேற்பட்ட ஜோடி காலணிகளை வாங்கி வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்தக் காலணிகளை அணிந்து பயன்படுத்துவதற்கு முன்பே மகள் தங்களை விட்டுப் பிரிந்துவிட்டதாக அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
மகளுக்காக ஆசையுடன் வாங்கி வைத்திருந்த அந்தக் காலணிகள் அனைத்தும் இன்றும் வீட்டிலேயே இருப்பதாகவும், அவை மகளின் நினைவுகளைத் தொடர்ந்து தங்களுக்கு நினைவூட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மகளுக்காக வாங்கி வைத்த காலணிகள் பயன்படுத்தப்படாமல் வீட்டிலேயே இருப்பதை நினைத்து மனம் வருந்திய விஜய் ஆண்டனி, இனிமேல் தானும் செருப்பு அணியப் போவதில்லை என முடிவெடுத்ததாக பாத்திமா தெரிவித்துள்ளார்.
தனது மகளின் நினைவாக விஜய் ஆண்டனி எடுத்துள்ள இந்த முடிவு குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |