பிக்பாஸ் முத்துக்குமரனுக்கு புதிய சிக்கல்... காவல் ஆணையர் அலுவலகத்தை நாடிய பெண் பிரபலம்!
பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதுடன், பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பெண் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம்
இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான முத்துக்குமரன், தனக்குத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து நெருங்கிப் பழகியதாகவும், பின்னர் திருமணம் செய்ய மறுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகித் தற்கொலைக்கு முயன்றதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

தற்கொலை முயற்சிக்குப் பின்னர் மருத்துவமனையில் இருந்தபோதுகூட, தன்னைத் தொடர்புகொண்டு தற்கொலை முயற்சிக்கும் தனக்கும் தொடர்பில்லை எனக் கூறுமாறு முத்துக்குமரன் வற்புறுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
காவல் ஆணையர் அலுவலகம் வரை சென்ற விவகாரம்!
பெற்றோரிடம் பேசியும் தீர்வு கிடைக்கவில்லை புகார் அளிப்பதற்கு முன்னதாக முத்துக்குமரனின் பெற்றோர்களைச் சந்தித்துப் பேச முயன்றதாகவும், அவர்களிடம் இருந்து உரிய பதில் கிடைக்காததால் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்வதாக அளித்த வாக்குறுதியை முத்துக்குமரன் நிறைவேற்ற வேண்டும் என்றும், இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப் பெண் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |