கர்ப்பமாக இருக்கிறாரா மணிமேகலை? அவரே வெளியிட்ட அசத்தலான பதிவு
மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாரா எனக்கேட்ட கேள்விக்கு அவரே ஒரு சிறப்பான பதிவைக் கொடுத்திருக்கிறார்.
மணிமேகலை
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்டது. இதனால் முதலாம், இரண்டாம், மூன்றாம் சீசன் என கடந்து தற்போது நான்காவது சீசன் வரை வந்திருக்கிறது.
இந்நிகழ்ச்சியில், கோமாளியாக கலக்கிவருபவர் மணிமேகலை, விதவிதமாக கெட்டப் போட்டு அனைவரையும் கவர்ந்தவர். இவ்வாறு எல்லா மக்களாலும் விரும்பப்பட்டவர் திடீரென குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார்.
கர்ப்பமாக இருக்கிறாரா?
மேலும், நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கான காரணங்களாக அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் வேறு பல வாய்ப்புகள் வந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவர் தற்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.
அதில் அவர் கர்ப்பமாக இருக்கிறேனா? இல்லையா? என்பது பற்றி அவரே கூறியிருக்கிறார். அதில் அவர் தெரிவித்ததாவது,
மணிமேகலையின் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ரசிகர் நீங்கர் கர்ப்பமாக இருக்கிறீர்களா என கேட்ட கேள்விக்கு பதிலளித்த போது அதில், “அது வெறும் வதந்தி, யூடியூபில் என்னைப் பற்றி ஒரு செய்தி வந்து அது உங்களுக்கு தெரியவரும் வரை நான் இருக்க மாட்டேன். என்ன சந்தோஷமான செய்தியாக இருந்தாலும் நானே கூறுவேன்” என தனது பதிலை பதிவாக கூறியிருக்கிறார்.