நிகழ்ச்சியிலிருந்து விலகிய மணிமேகலை: இதுதான் காரணம்! செஃப் தாமு அளித்த பேட்டி...
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது குறித்து அந்நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் செஃப் தாமு பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
மணிமேகலை
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்டது.
இதனால் முதலாம், இரண்டாம், மூன்றாம் சீசன் என கடந்து தற்போது நான்காவது சீசன் வரை வந்திருக்கிறது. இந்நிகழ்ச்சியில், கோமாளியாக கலக்கிவருபவர் மணிமேகலை, விதவிதமாக கெட்டப் போட்டு அனைவரையும் கவர்ந்தவர்.
இவ்வாறு எல்லா மக்களாலும் விரும்பப்பட்டவர் திடீரென குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார்.
விலகியதற்கான காரணம்
மேலும், நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கான காரணங்களாக அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் வேறு பல வாய்ப்புகள் வந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவர்கள் புதுமுயற்சி ஒன்றில் இறங்கியிருந்தனர்.
இந்நிலையில் செப் தாமு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மணிமேகலை விலகியது குறித்து பேசியுள்ளார்.
அதில் குக் வித் கோமாளி பொருத்தவரை மணிமேகலை காமெடியை ரொம்பவும் மிஸ் செய்கிறேன் என்றும் அவர் என்னுடைய மகள் போன்றவர் என்றும் கூறியுள்ளார்.
அவர் வெளியே வெளியேறியது சற்று வருத்தத்தை தந்தாலும் அது அவருடைய தனிப்பட்ட முடிவு.
ஏற்கனவே தொகுப்பாளினியாக உள்ளவர் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவரது எதிர்காலம் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் வெற்றியடைய வாழ்த்து வதாகவும் செப் தாமு கூறினார்.