ஏன் கடல் நீர் துருப்பிடிப்பதை துரிதப்படுத்துன்னு தெரியுமா? இது தான் காரணம்!
பொதுவாகவே வீடுகளில் உள்ள இரும்பு பொருட்களில் நாட்கள் செல்ல செல்ல துரு பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்தது தான்.
ஆனால் சாதரணமான இடங்களில் உள்ள வீடுகளில் இருக்கும் இரும்பு பொருட்களை விட கடல் கரையை சார்ந்திருக்கும் வீடுகள், மற்றும் நிறுவனங்களின் இரும்பு பொருட்கள் அல்லது இயந்திர பாகங்கள் விரைவாக துருபிடிக்கும்.
அதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா? உப்புத் தண்ணீர் சாதாரண நீரை விட மிக வேகமாக துருப்பிடித்தலை ஏன் தூண்டுகின்றது என்பதற்கான விரிவான அறிவில் விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

இரும்பு துருப்பிடித்தல் என்றால் என்ன?
துருப்பிடித்தல் என்ற இயற்கை செயல்டுறையானது இரும்புப் பொருள்களை பாதிப்படையச் செய்து நாளடைவில் அவற்றை மெல்ல அழித்து விடும் தன்மை கொண்டது.
இரும்பு பொருட்கள் காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் தாக்கமடைந்து அதன் ஆக்சைடுகளாக மாறும் நிகழ்வை தான் துரு பிடித்தல் என்று குறிப்பிடுகின்றோம்.

அதாவது இரும்பு, ஆக்சிஜன் மற்றும் நீர் ஆகியவை இணைந்து வேதியல் தாக்கம் அடைவதால், இரும்பு ஆக்சைடாக (Fe₂O₃·nH₂O) மாறும்.
இது ஒரு ஆக்சிஜனேற்ற-ஒடுக்க (Redox) செயல்முறை, இதில் இரும்பு ஆக்ஸிஜனேற்றம் அடைந்து, ஈரப்பதத்துடன் இணையும் போது புதிய, செம்பழுப்பு நிற சேர்மமாக மாறுகிறது, இதனால் இரும்புப் பொருள்கள் நாளடைவில் வலுவிழந்து சிறிது சிறிதாக அழிக்கப்படுகின்து.

உதாரணமாக பாலங்கள், கப்பல்கள், கார்கள், லாரியின் பாகங்கள் போன்ற பல உறுதியான பொருள்கள் இரும்பினால் செய்யப்படுவதால், அவை இவ்வாறு துருப்பிடித்தலுக்கு உள்ளாகுகின்றது.
உப்புத் தண்ணீர் ஏன் துருப்பிடிப்பதை துரிதப்படுத்துகிறது?
சாதாரண நீரை விடவும் உப்புத் தண்ணீர் மிக வேகமாக துருப்பிடிக்கக் காரணமாகின்றது. அதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் என்னவென்றால், உப்பில் உள்ள அயனிகள் (ions) நீரை சிறந்த மின் கடத்தியாக மாற்றுவதால், இரும்பின் ஆக்சிஜனேற்ற செயல்முறையையானது (oxidation process)மிகவும் வேகமான நடைப்பெறுகின்றது.

அதாவது, உலோகத்தின் எலக்ட்ரான்கள் எளிதில் வெளியேறி, துருப்பிடித்தல் மிக விரைவாக நிகழ்கின்றது.
சாதாரண நீரில் ஆக்சிஜனேற்றம் நடந்தாலும், உப்பின் வினையூக்கி (catalyst) விளைவால் உப்புத் தண்ணீர் துருப்பிடிப்பதை பல மடங்கு விரைவுப்படுத்துகின்றது.

உப்பானது சோடியம் மற்றும் குளோரைடு (NaCl) என்ற வேதிப்பெருட்களினால் உருவாகின்றது.இது நீரில் கரையும்போது, அது சோடியம் (Na+) மற்றும் குளோரைடு (Cl-) அயனிகளாகப் பிரிகிறது.
இந்த அயனிகள் தண்ணீரில் மின்சாரத்தைக் கடத்த உதவுகின்றன, இதனால் துருப்பிடிப்பதற்குத் தேவையான எலக்ட்ரான்கள் எளிதாகப் பணிப்பதன் விளைவாகவே இரும்பு பொருட்கள் விரைவில் துருப்பிடிக்கின்றன.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |