கர்ப்பமாக இருப்பதால் விலகினாரா மணிமேகலை? குட் நியூஸ் சொன்ன கணவர்
குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை தொடர்பிலான செய்திதான் தற்போது அனைத்து சமூகவலைத்தளங்களிலும் பேசும் பொருளாக மாறியது. இவர் விலகியதற்கான காரணம் தற்போது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
குக் வித் கோமாளி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ஒன்றுதான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்டது.
இதனால் முதலாம், இரண்டாம், மூன்றாம் சீசன் என கடந்து தற்போது நான்காவது சீசன் வரை வந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் குக்குகளை விட கோமாளிகளுக்கு தான் அதிக மவுசு.
இந்நிகழ்ச்சியில், கோமாளிகளாக மணிமேகலை, சுனிதா, ஜிபி முத்து, மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா, புகழ், குரேஷி, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா பிளஸ்சி ஆகியோர் கலக்கி வருகின்றனர்.
இதில் மணிமேகலை விதவிதமாக கெட்டப் போட்டு அனைவரையும் கவர்ந்தவர். இவ்வாறு மக்களை விரும்ப வைத்துவிட்டு தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்து விட்டார்.
ஹுசைன் சொன்ன குட் நியூஸ்
மணிமேகலை விலகியது கவலையளித்தாலும் தற்போது அவரது கணவர் சொன்ன குட் நியூஸால் அனைவரும் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.
மணிமேகலை-ஹுசைன் திருமணம் ஆகி 6 வருடங்கள் கழித்து கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் தான் குக் வித் கோமாளி ஷோவிலிருந்து விலகியுள்ளதாக கூறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்தளவுக்கு உண்மை என்பதும் தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.