மீண்டும் ரீல்ஸ் பக்கம் சென்ற பிக்பாஸ் பிரபலம்! நெட்டிசன்கள் மனதை வென்ற வீடியோ காட்சி
பிக் பாஸை விட்டு வெளியேறிய பிக் பாஸ் தனலெட்சுமி தற்போது அவரின் முதல் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மக்களின் போட்டியாளர்
பிக் பாஸ் சீசன் 6 பிரபல தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
இதில் மக்கள் சார்பில் தெரிவு செய்யப்பட்டவர் தான் தனலெட்சுமி. இவர் தான் பிக் பாஸ் வீட்டில் வந்த பிரபலங்களில் எந்தவொரு பப்ளிசிட்டியும் இல்லாமல் வந்தவர்.
மேலும் பிக் பாஸ் தனலெட்சுமி வெளியேற்றப்படாமல் இருந்தால் கண்டிப்பாக டைட்டில் வின்னரை அடித்திருப்பார்.
பிக் பாஸ் வீட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூட இவரை கூறலாம் அந்தளவு துடிதுடிப்பாக இருப்பார். நன்கு ஆர்வதுடன் டாஸ்க்களிலும் பங்கேற்பார்.
அதிரடியாக வெளியேற்றம்
இந்நிலையில் பிக் பாஸ் குயின்னாக இருந்த தனலெட்சுமி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறைவான வாக்குகள் பெற்றதாக கூறி வெளியேற்றப்பட்டார். ஆனால் இந்த நடவடிக்கை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இவரின் செயற்பாடுகள் உண்மையானவையாக இருக்கும் போது இவர் ஏன் வெளியேற்றப்பட்டார் என பலர் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
இன்று பிக் பாஸ் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு சரியான காரணம் தெரியவில்லை. இவர் மக்கள் மத்தியில் ரீல்ஸ் செய்து பிரபல்யமடைந்தவர். இதனால் மக்களின் ஆதரவு மக்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது.
வைரலாகும் வீடியோக்காட்சி
மேலும் இவர் வெளியான பின்னர் சீக்ரட் ரூமில் இருக்கிறார் என தகவல் பரவின. ஆனால் மணிகண்டன் வெளியேறிய பின்னர் பேட்டிக் கொடுத்தார்.
இதனையடுத்து இவர் வெளியேறிய பின்னர் முதல் ரீல்ஸ் வீடியோ காட்சியை அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பழையதை மறக்காத பிக் பாஸ் விராங்கனை என்றால் இவர் தான் என மகிழ்ச்சியளிக்கும் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.