மதம் மாறிவிட்டாரா மணிமேகலை? ரசிகர்களின் கேள்விக்கு தரமான பதிலடி
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகிய மணிமேகலை தற்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விதம் வைரலாகி வருகின்றது.
மணிமேகலை
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ஒன்றுதான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்டது.
இந்த நிகழ்ச்சி தற்போது 4ஆவது சீனனும் சிறப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த நான்கு சீசனிலும் கோமாளியாக இருந்த மணிமேகலை விதவிதமாக கெட்டப் போட்டு அனைவரையும் கவர்ந்தவர்.
இவ்வாறு மக்களை விரும்ப வைத்துவிட்டு தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்து விட்டார்.
மேலும், நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கான காரணங்களாக அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் வேறு பல வாய்ப்புகள் வந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவர்கள் புதுமுயற்சி ஒன்றில் இறங்கி அதன் ஆரம்ப விழாவில் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தார்.
மதம் மாற்றப்பட்டாரா?
மணிமேகலை முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஹுசைன் என்பவரை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில் தற்போது மணிமேகலை மதம் மாற்றப்பட்டு விட்டார் என்ற டுவிட்டர் செய்தி வைரலாகி வருகின்றது.
மணிமேகலை தனது கணவர் ஹூசைனுடன் சேர்ந்து 2020ஆம் ரம்ஜான் தினத்தன்று முஸ்லிம் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
அதற்கு ஒரு இணையவாசி “மணிமேகலை... எப்படி ஆரம்பிச்சது எப்படி முடிஞ்சிருக்கு பாத்திங்களா! லவ்_ஜிகாத்...! மதமேன பிரிந்தது போதும்“ வலதுசாரி ஆதரவாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
மணிமேகலை...
— பாஜக தகவல் தொழில் நுட்ப பிரிவு- செங்கம் (@karthinpm) March 21, 2023
எப்படி ஆரம்பிச்சது
எப்படி முடிஞ்சிருக்கு பாத்திங்களா
லவ்_ஜிகாத்
மதமேன பிரிந்தது போதும் pic.twitter.com/QpEg21SdUP
அதற்கு மணிமேகலை, “இப்படியே வாழ்நாள் முழுவதும் நினைத்துக் கொண்டே இருக்க, செய்யும் வேலையைப் போய்ப் பார்க்க முடியாது” என அவர் கூறிய பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், மணிமேகலை தன்னுடைய கணவர் தன்னுடன் பொங்கல் வைத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘ரெண்டு வருஷமா போட்டுட்டு தான் இருக்கேன் சமீபத்தில் ரெண்டு பேரும் போய் பொங்கல் வச்சோம் எப்படி ரம்ஜான் புகைப்படத்தை ஆழமா பார்க்கிற மாதிரி தீபாவளி பொங்கலுக்கு நான் போடும் புகைப்படத்தையும் பார்த்தா நானும் கொஞ்சம் சந்தோஷப்படுவேன்’ என பதிலை பதிவிட்டிருக்கிறார்.
Ipdi life fulla ularitey irukaradhuku poi urupadra vazhiya paakalamla ?♂️ https://t.co/VfokoEg0Wt
— MANIMEGALAI (@iamManimegalai) March 22, 2023