இறுதி மேடைக்கு செல்லும் போட்டியாளருக்கு காத்திருந்த கமல்! அடையாளம் தெரியாமல் தவித்த உலகநாயகன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே சென்ற விருந்தினர் கொடுத்த டாஸ்கினால் போட்டியாளர்கள் அடையாளம் தெரியாமல் காணப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இறுதி கட்டத்திற்கு சென்றுள்ள நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் நபர் யாராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக நிலவி வருகின்றது.
மேலும் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பொங்கல் கொண்டாட பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ள நிலையில், வந்தவர்கள் உள்ளே இருந்த போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு டாஸ்க்கையும் கொண்டு வந்தனர்.
அந்த வகையில் அமுதவானன் தலைமுடி கலர் மாற்றப்பட்டது, விக்ரமன் ஒரு பக்கம் தாடி மீதை எடுக்கப்பட்டது, அசீம் கைலி கட்டிக்கொண்டிருந்தார், ஏடிகே தலைமுடியும் பாதியாக வெட்டப்பட்டது, ஷிவின் முக அலங்காரம் செய்யாமல் காணப்பட்டார்.
இந்நிலையில் கமல்ஹாசன் அனைவருக்கும் நேரம் கொடுத்து அவர்களை மறுபடியும் நாயகர்களாக கிளம்பி வரக்கோரினார். பின்பு அனைவரும் கம்பீரமாக கிளம்பி வந்தனர்.
இதனை பார்த்த கமல்ஹாசன் தற்போது தான் அடையாளம் தெரிகின்றது என்று கூறி மகிழ்ச்சியடைந்தார்.