கமல் சாரையே அழவைத்த விக்ரமன்: கடிதத்தை பார்த்து அழுத கமல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமனின் கடிதம் குறித்து பேசுகையில் கமல் அழுகும் ப்ரோமோ இப்போது வெளியாகியுள்ளது.
கடிதம் எழுதிய ஹவுட்ஸ்மேட்ஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் புதுவிதமான டாஸ்க்குகளை கொடுத்து போட்டியாளர்களை பரீட்சித்துப் பார்ப்பார்கள்.
அதேபோல இந்தவாரம் இடம்பெற்ற டாஸ்க்குகளில் போட்டியாளர்கள் மட்டுமல்ல நிகழ்ச்சித் தொகுப்பாளர் கமல்ஹாசனே அழுதிருப்பார்.
இந்த வாரம் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளைப் போன்ற டாஸ்க்குகளை மாறி மாறி கொடுத்தார். அப்பொழுது ஒவ்வொருவரும் யாருக்காவது கடிதம் எழுதி அதை ஹவுஸ்மேட்ஸ் முன்பு வாசித்தனர்.
அப்படி கடிதத்தை வாசிக்கும்போது பிக்பாஸ் வீட்டில் கண் கலங்கி அழுதிருப்பார்கள். இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் கமல் ஒரு கடிதத்ததை படித்து விட்டு அழுதுள்ளார்.
விக்ரமனின் கடிதம்
அந்தவகையில் விக்ரமன் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பார். கமல் கூறியதைத் தொடர்ந்து அம்பேத்கர் அவர்கள் தனக்காக ஒரு பைசா கூட சேர்த்து வைக்காத தந்தை அவர்.
கேட்க நாதியற்ற ஜனத்திற்காக போராடியவர் என பேச பேச கமல்ஹாசனின் கண்களில் இருந்து கண்ணீர் வரத்தொடங்கிவிட்டது.
#Day77 #Promo3 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/7PwlLmPFJl
— Vijay Television (@vijaytelevision) December 25, 2022