Beauty Skincare Secret: கண்ணாடி சருமத்தின் இரகசியம்
எந்தவித ரசாயனங்களும் இல்லாமல் இயற்கையாகவே சருமத்தை பொலிவு பெறச்செய்யும் வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
இயற்கையில் சருமம் பொலிவு பெற
பளபளப்பான, ஆரோக்கியமான சருமம் அனைவரின் கனவாகும். அதற்கு விலை உயர்ந்த க்ரீம்கள் மட்டுமல்ல, சரியான தினசரி ஸ்கின் கேர் பழக்கமும் அவசியம். முதலில் சருமத்தை சுத்தமாக வைத்திருப்பது மிக முக்கியம்.
தினமும் காலை மற்றும் இரவு மென்மையான ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். இது மாசு, எண்ணெய் மற்றும் தூசியை நீக்க உதவும்.
ஆனால் பல இரசாயனப்பொருட்களை நாம் சருமத்திற்கு பயன்படுத்தினாலும் நமது இயற்கை சார்ந்த அழகு சாதன பொருட்கள் நமக்கு மிகவும் பளபளப்பான சருமத்தை கொடுக்கும்.

இயற்கையில் முகப்பெலிவு படிமுறைகள்
காலையில் எழுவதில் இருந்து இரவு தூங்குவது வரைக்கும் சருமத்தை பளப்பு நீங்காமல் வைத்திருப்பது அவசியம்.
கற்றாழை- கற்றாழை சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளையும், தழும்புகளையும் மறைத்து சீரான சருமத்தை தரும். ஒரு கற்றாழை இலையை எடுத்து நடுவில் வெட்டி, அதிலுள்ள ஜெல்லை எடுத்து முகத்தில் தேய்த்து கொள்ள வேண்டும்.
கற்றாழை செடியை வீட்டிலேயே வளர்க்கலாம். இதை காலையில் ஒரு பேஸ் வாஷ் போட்டு முகத்தை கழுவிய பின்னர் செய்ய வேண்டும். கற்றாழை ஜெல்லை பூசி 20 நிமிடங்கள் கழித்து சாதாரண தண்ணீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.

சீரகம் மஞ்சள் துண்டு,சீரகம் ஒரு கப் தண்ணீரில் அரை டீஸ்பூன் போட்டு நன்றாக அவித்து அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் நெய் கொஞ்சம் கலந்து குடிக்க வேண்டும்.
முக்கியமாக அந்த தண்ணீர் ஒரு அளவான சூட்டில் இருக்க வேண்டும். இதை வாரத்தில் இரண்டு நாள் குடித்தால் போதும்.

முல்தானி மெட்டி- முல்தானி மெட்டி, தயிர், எலுமிச்சை சாறு போட்டு நன்றாக மிக்ஸ் செய்து தலை முடியில் படாமல் முகம் மற்றும் கழுத்து கால் கை காது போன்றவற்றிற்கு போட்டு 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
அது நன்றாக உலர்ந்ததும் வாழைப்பழத்தின் தோலை ரோஸ் வாட்டரில் நனைத்து அதை அப்படியே துடைத்து எடுக்க வேண்டும். இதை செய்து ஒரு பத்து நிமிடங்களில் சாதாரண நீர் கொண்டு இரசாயன பொருட்கள் பயன்படுத்தாமல் முகத்தை கழுவ வேண்டும்.
பயத்த மாவு- இரவில் தூங்கும் முன் பயற்றை மாவுடன் உருளைகிழங்கு சாற்றை கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வைத்து சாதாரண தண்ணீரில் தினமும் பயன்படுத்தும் பேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.
கழுவி முடித்தவுடன் நீங்கள் முகத்திற்கு ஆமணக்கு எண்ணெய், ஒரு துளி கடுகு எண்ணெய் ஒரு துளி எடுத்து கழுத்து காது முகத்திற்கு பூசி விட்டு அப்படியே தூங்கி காலையில் எழும்பி கழுவ வேண்டும். இதை வாரம் நான்கு முறை செய்யலாம்.
குறிப்பு - சருமத்திற்கு பொலிவு கிடைக்க இதுபோன்ற இயற்கையான வழிமுறையை பின்பற்றி பாருங்கள் நீங்கள் மேக் அப் போடாமலே முகத்தில் பொலிவை பெறுவீர்கள்.
எப்போதும் நிரந்தரமான அழகை தேடி செல்வது மிகவும் முக்கியம். இரசாயனத்தை தேடி போகாமல் இயற்கையில் ஆரோக்கியம் அழகை தேடலாம்.
மிக முக்கியமாக காலை உணவில் பச்சை காய்கறி அல்லது இரண்டு முட்டை மற்றும் சோயா பால் குடிக்க வேண்டும். இதனுடன் உங்கள் காலை உணவு இட்லி தோசையும் சாப்பிடலாம். எண்ணெய் உணவுகளை தவிர்த்து சாப்பிடுங்கள். இதை ஒவ்வொரு நாளும் செய்யுங்கள்.
மதிய உணவில் புரதம் அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள், கீரைகள், பழங்கள், பச்சை காய்கறிகள் என சரிவிகித உணவாக இருப்பது அவசியம்.
ஒருபோதும் சாப்பிட்டவுடன் தூங்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டாம். அப்படி தூங்கினால் உங்கள் உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக படிந்து உடல் எடை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |