இந்த 3 அறிகுறிகளை புறக்கணித்தால் மாரடைப்பு உறுதி! எச்சரிக்கும் மருத்துவர்கள்
தற்காலத்தில் வயது வேறுபாடுகள் இன்றி, உலகளவில் அதிக இறப்புகளுக்கு உயர் ரத்த அழுத்தமே முக்கிய காரணமாக அறியப்படுகின்றது.
ஒரே இடத்தில் அமர்ந்தபடி பல மணிநேரங்கள் வேலை பார்த்தல், துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, போதியளவு தூக்கமின்மை, முறையற்ற வாழ்க்கை முறை பழக்கங்கள், மனஅழுத்தம், அதிகரித்த உடல் பருமன் போன்ற பல்வேறு காரணிகள் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணியாக அமைகின்றது.

உயர் ரத்த அழுத்தத்தின் முக்கிய அறிகுறிகள் நாம் அன்றாடம் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சினைகள் போலவே இருப்பதன் காரணமாக யாரும் அதனை பெரிதாக பொருட்படுத்துவது கிடையாது.
ஆனால் அதனை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாத போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அளவுக்கு அபாயகரமான விளைவுகளை ஏற்டுத்தக்கூடும். எனவே உயர் ரத்த அழுத்தின் எந்த அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கவே கூடாது என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

காலை நேர தலைவலி
பொதுவாக காலையில் தூக்கத்தில் இருந்து எழும் போதே தலைவலியை உணர்க்கின்றீர்கள் என்றால் நிச்சயம் இது ஆபத்தான அறிகுறியாகவே பார்க்கப்படுகின்றது.
காரணம் அதிகாலையில் ஏற்படும் தலைவலியானது அதிக மன அழுத்தம் அல்லது போதுமான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால் சந்திக்க நேரிடும்.

குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் இருந்தாலும், இப்படியான தலைவலியை ஏற்படும். அதனை கண்டுக்கொள்ளாமல் விடுவது உயிராபத்தை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக இந்த வகையான தலைவலி காலையில் எழுந்ததும், தலையின் பின்புறத்தில் ஏற்படும். தூக்கத்தின் போது அல்லது அதிகாலையில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது, மண்டை ஓட்டில் அழுத்தம் அதிகரிக்கிறது.
அதன் விளைவாகவே இந்த தலைவலியை சந்திக்க நேரிடுகிறது. எனவே அடிக்கடி காலையில் எழுந்ததும் தலைவலியை சந்தித்தால், உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
பார்வையில் மாற்றம்
பார்வையில் ஏற்படும் மாற்றங்களும் உயர் இரத்த அழுத்தத்தின் முக்கிய எச்சரிக்கை அறிகுறி என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
காரணம் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது, அது கண்களில் உள்ள சிறிய இரத்த குழாய்களை கடினப்படுத்தி, உயர் இரத்த அழுத்த ரெட்டினோபதியின் நிலைக்கு உள்ளாக்குகிறது.

அதனால் பார்வை மங்கலாக தெரிவது அல்லது தெளிவின்றி இரண்டாக தெரிவது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
தினமும் கணினி திரையை பார்த்தப்படி அதிக நேரம் பணிப்புரிபவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படுவதால், அதனை சாதாரணமாக சிலர் நினைக்கின்றார்கள்.
ஆனால் இந்த பிரச்சினையை தொடர்ந்து அனுபவித்தால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
அதிக உடல் சோர்வு
மிகுந்த உடல் சோர்வை உணர்கின்றீர்கள் என்றால்,அது உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக மூளை மற்றும் இதயத்திற்கு போதுமான ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் கிடைக்காமையின் விளைவாக இருக்கலாம்.

எனவே நல்ல தூக்கத்தை அனுபவித்த பபின்னரும் ஒருவர் மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், உடனே மருத்துவரை அனுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகின்றது.
இதனை புறக்கணிப்பதால், மாரடைப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |