கொலஸ்ட்ரால் இருந்தால் முட்டை சாப்பிடலாமா?
இன்றைய காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை நோய்க்கு பாதிக்கப்படுவது அறிதே. தற்போது கொலஸ்ட்ரால் நோயானது வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். நாம் கடைகளில் விரும்பி சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் அதிக கொழுப்புகள் இருக்கத்தான் செய்கிறது.
இவ்வாறு கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிட வேண்டும், இந்த உணவுகளை சாப்பிடக் கூடாது என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது.
அந்த வகையில் கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா? அவ்வாறு சாப்பிட்டால் ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடலாம் என்பதைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.
முட்டை சாப்பிடலாமா?
முட்டையில் அதிக கொழுப்பு சத்து நிறைந்து இருப்பதால் கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா என்ற எண்ணம் இருக்கும்.
முட்டை சாப்பிட்டால் உங்கள் கொலஸ்ட்ரால் அளவுகளில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும். இருப்பினும், முட்டை மட்டும் இதய நோய் அபாயத்தை கணிசமாக அதிகரிக்காது.
முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தாலும், அவை முதலில் நினைத்தது போல் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்காது என ஆய்வு சொல்கிறது.
மேலும், உங்கள் உடலுக்கு தேவையான கொழுப்பு அளவுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கிறீர்கள் எனில் தினமும் ஒரு முட்டை எடுத்துக்கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |