உங்கள் குழந்தைகளுக்கு கொலஸ்ட்ரால் இருக்கலாம்: இரத்த பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது
இன்றைய காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை நோய்க்கு பாதிக்கப்படுவது அறிதே. தற்போது கொலஸ்ட்ரால் நோயானது பெரியவர்களுக்கு மாத்திரமல்ல சிறியவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதுள்ள குழந்தைகள் அதிகமாக செல்போன் மற்றும் டிவியே கதி என்று பழக்கப்பட்டுவிட்டார்கள். ஓடி ஆடி விளையாடுவதில்லை. எல்லாமே ஒரு செல்போனில் தான் இருக்கிறது என அதற்குள் மூழ்கி விடுகிறார்கள்.
அதேபோல உணவு முறைகளை மாற்றி விட்டார்கள் அதனால் தான் இப்போதுள்ள குழந்தைகளுக்கு அதிக நோய்களுக்கு பாதிக்கப்படுகிறார்கள். உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருப்பது இரத்த நாளங்களின் சுவர்களில் அடைப்பை உருவாக்க காரணமாக இருக்கிறது.
இதன் காரணமாக இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இதயத்தின் ஆரோக்கியம் மோசமடையும்.
அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது பரம்பரையாக கூட வரலாம். இது பெரும்பாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தேர்வுகளின் விளைவாக அமைகிறது. ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சில நேரங்களில் மருந்துகள் அதிக கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
இளவயதில் கொலஸ்ட்ரோல்
குழந்தைகள் உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பது எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. நீங்கள் குழந்தைக்கு அடிக்கடி இரத்த பரிசோதனை செய்து பார்த்துக்கொண்டால் தான் இதனை அறிந்துக்கொள்ள முடியும்.
தவிர்க்க வேண்டியவை
குழந்தைகளுக்கு எண்ணெய்யில் வறுத்து மற்றும் பொறித்த உணவு வகைகளை கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.
அதிக இனிப்பு பானங்கள் மற்றும் சோடாக்கள் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். இனிப்புப் பொருட்கள் மற்றும் கேக் போன்ற உணவுகளில் நிறைய கொழுப்பு மற்றும் கலோரிகள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்துவிடும்.
குழந்தைகளுக்கு கொலஸ்டராலின் அளவை குறைக்க அவர்களை உடற்பயிற்சி செய்ய வைக்க வேண்டும். தினமும் 60 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது குழந்தைகளின் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.
மேலும் குழந்தையின் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ப அவர்களின் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்படி பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.