கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு மருந்தாகும் Atorvastatin பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
உயர் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க Atorvastatin பயன்படுத்தப்படுகிறது, கொலஸ்ட்ராலை உருவாக்கும் என்சைம்களை தடுப்பதால் கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்கிறது.
கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கிறது.
பக்கவிளைவுகள்
- செரிமானமின்மை
- வயிற்றுப்போக்கு
- மூட்டுகளில் வலி
- தொண்டையில் எரிச்சல்
- குமட்டல்
- சிறுநீரக பாதை தொற்று
- கல்லீரல் செயல்பாடுகளில் மாற்றம்
பெரும்பாலான நபர்களுக்கு Atorvastatin பாதுகாப்பான ஒன்றே, ஒருவேளை வாயு தொந்தரவு, வயிற்றுப்போக்கு போன்ற பக்கவிளைவுகள் இருந்தால் உணவுடன் சேர்த்து மருந்துகளை உட்கொள்ளவும்.
தசைகளில் வலி மற்றும் மயக்க உணர்வு இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
மருந்துகளை எடுத்துக்கொள்ளும் முன்னர் கல்லீரலின் செயல்பாடுகளை பரிசோதிப்பது அவசியம், மருந்துகளை உட்கொள்ளும் நாட்களில் வயிற்றில் அதீத வலி, சிறுநீரின் நிறம் மாறுதல் உட்பட மஞ்சள் நிற கண்கள் மற்றும் தோலின் நிறத்தில் மாற்றம் இருந்தால் மருத்துவரிடம் அவசியம் தெரிவிக்கவும்.
சிறுநீரக நோயாளியாகவோ, கல்லீரல் நோயாளியாகவோ, சர்க்கரை நோயாளியாகவோ இருந்தால் மருத்துவரிடம் தெரியப்படுத்தவும்.
சர்க்கரை நோயாளியாக இருக்கும் பட்சத்தில் அடிக்கடி ரத்த சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளவும்.
தாய்ப்பால் ஊட்டும் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்பம் தரிக்க திட்டமிடும் பெண்களும் Atorvastatin மருந்துகளை மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
குறிப்பு- மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆபத்தான ஒன்றே.