வித்தியாசமான சொக்லேட் செண்ட்விச்! எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவீர்கள்
அவசர உணவாக பெரும்பாலும் அனைவராலும் செய்யப்படும் ஒரு உணவென்றால் அது செண்ட்விச் தான். ப்ரெட்டை வாங்கி அதில் காய்கறிகள், முட்டை, பட்டர், கிழங்கு என வீட்டில் என்ன இருக்கின்றதோ அதை செண்ட்விச்சுக்குள் வைத்து உண்ணுவோம்.
சற்று வித்தியாசமாக சொக்லேட்டை செண்ட்விச்சுக்குள் வைத்து உண்டால் எப்படி இருக்கும். நிச்சயம் இந்த சமையல் குறிப்பு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சொக்லேட் செண்ட்விச் எப்படிசெய்யலாம் எனப் பார்ப்போம்...
தேவையான பொருட்கள்
ப்ரெட் - 4 துண்டுகள்
டார்க் சொக்லேட் துண்டுகள் - தேவையான அளவு
பட்டர் - தேவையான அளவு
செய்முறை
முதலாவதாக ப்ரெட் துண்டுகளின் ஒரு பக்கம் மட்டும் பட்டரை தடவிக் கொள்ளவும்.
அதன்பின்பு ப்ரெட்டின் பட்டர் தடவிய பக்கத்தில் சொக்லேட் துண்டுகளை வைத்து, மற்றொரு ப்ரெட்டின் பட்டர் தடவிய பக்கத்தைக் கொண்டு மூட வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பட்டர் தடவி, தயாரித்துள்ள வைத்துள்ள செண்ட்விச்சை லேசாக அழுத்திவிட்டு இருபுறமும் டோஸ்ட் செய்யவும்.
அடுப்பின் சூட்டில் சொக்லேட் உருகி ப்ரெட்டில் பரவியதும் உண்ண ஆரம்பிக்கலாம்.