கேரட்டில் ஐஸ்க்ரீம் செய்து பாருங்கள்... மெய் மறந்து சாப்பிடுவீங்க
ஐஸ்க்ரீம் என்றால் அனைவருக்குமே பிடிக்கும். அது எந்த சுவையுடையதாக இருந்தாலும் சரி. இந்த ஐஸ்க்ரீமையே சத்தான ஒரு உணவுப் பொருளுடன் உண்டால் எப்படி இருக்கும்? கேரட்டில் ஐஸ்க்ரீம் செய்து உண்டால் எப்படி இருக்கும்.
அதுமட்டுமின்றி கேரட்டில் விட்டமின் பி1, விட்டமின் பி6, நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் காணப்படுகின்றன. இனி கேரட் ஐஸ்க்ரீம் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கேரட் - 4 (நறுக்கியது)
பால் - 1 கப்
பிஸ்தா - 8
சீனி - 1/4 கப்
மஞ்சள் பொடி - 1/4 சிட்டிகை
வெனிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் நறுக்கிய கேரட்டை போட்டு வேகவைத்து அது ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
அரைத்த கலவையுடன் சீனி சேர்த்து கலக்கி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
முப்பது நிமிடங்களுக்குப் பின்னர் மிக்ஸியில் போட்டு, ஒரு சுற்று சுற்றி பொடித்த பிஸ்தா, சேர்த்து ஐஸ்க்ரீம் கப்புகளில் ஊற்றி மீண்டும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.
ஐஸ்க்ரீம் பதத்துக்கு வந்ததும் பரிமாறத் தொடங்கலாம்.