கோபத்தில் மிருகத்துக்கே டஃப் கொடுக்கும் டாப் 3 ஆண் ராசிகள்...இவர்களிடம் ஜாக்கிரதை!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே அதிகம் கோபம் கொண்டவர்களாக இருப்பார்களாம். இவர்கள் கோபம் யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஆபத்தானதாக இருக்கும்.

அப்படி கோபத்தில் மிருகத்தையே மிஞ்சுவிடும் வெறித்தனமான ஆற்றல் கொண்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

போர் கிரகமான செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் லட்சிய ராசியான மேஷம், அதன் உக்கிரமான கோபத்திற்குப் பெயர் பெற்றது. இவர்களிடம் நேரயாக மோதுவது மிகவும் ஆபத்தான விளைவுளை ஏற்படுத்தும்.
குறிப்பாக இந்த ராசி ஆண்களின் கோபத்துக்கு ஆளாகாமல் இருப்பது சிறப்பு. காரணம் இவர்களின் கோபம் வெறிப்பிடித்த சிங்கத்தை போல் கட்டுப்படுத்தவே முடியாததாக இருக்கும்.
அவர்களை கோபப்படுத்தும்போது, இந்த நெருப்பு ராசியினர் நிலைமையை நேரடியாக எதிர்கொள்ளத் சற்றும் தயங்க மாட்டார்கள். இவர்கள் கோபத்தின் விளைவு எதிரியை தடம் தெரியாமல் அழிக்கும் எப்பதை அவர்கள் நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள்.
ரிஷபம்

காதலின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசி ஆண்கள் இயல்பில் காதல் மன்னர்களாகவும், அன்பான குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
ஆனால் இவர்கள் சீண்டப்படுகின்றார்கள் என்பதை அறிந்தால் இவர்களின் ராசி சின்னம் காளையை போல் யாராலும் கட்டுப்படுத்த முடியாதவர்களாக மாறிவிடுவார்கள்.
இவர்களுக்கு துரோகம் செய்வதும், தனக்கு தானே சமாதி கட்டுவதும் ஒன்றுதான் இவர்களின் கோபம் மிகவும் ஆபத்தானதாக இருக்கும்.
மிதுனம்

கோபத்தில் ஆபத்தான முடிவெடுக்கும் மிதுக ராசி ஆண்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக அறியப்படுகின்றார்கள்.
அவர்களின் தனித்துவமான புத்திசாலித்தனம் கொண்டவர்களாகவும், வார்த்தைகளால் மிகவும் ஆபத்தான ராசிகளில் ஒன்றாகவும் அறியப்படுகின்றார்கள். இவர்கள் பொதுவாக யாரிடமும் தனிப்பட்ட விடயங்கள் குறித்து பகிர்ந்துக்கொள்வது கிடையாது.
ஆனால் இவர்களை யாராவது கோபப்படுத்திவிட்டால் அவர்களை கட்டுப்படுத்துவது பெரும் சவாலான விடயமாக இருக்கும். கோபத்தில் மற்றவர்களை வார்தைகளால் அதிக காயப்பதும் ராசியாகவும் இவர்கள் அறியப்படுகின்றார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |