இவர்கள் மட்டும் ப்ரோக்கோலி சாப்பிடக்கூடாது! ஏன் தெரியுமா?
பச்சை பசேலென்று குட்டி மரத்தை போன்று காட்சியளிக்கும் ப்ரோக்கோலியில் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
காலிபிளவர், முட்டைக்கோஸ், காலேவுடன் Brassica குடும்பத்தை சேர்ந்த ப்ரோக்கோலியை பச்சையாகவோ, சமைத்தோ உட்கொள்ளலாம்.
ஏராளமான விட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடன்டுகள், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
ஒரு கப் அதாவது 90 கிராம் ப்ரோக்கோலியில்
கார்போஹைட்ரேட்- 6 கிராம்
புரதச்சத்து- 2.6 கிராம்
கொழுப்பு- 0.3 கிராம்
நார்ச்சத்து- 2.4 கிராம்
விட்டமின் சி- 135% of the RDI
விட்டமின் ஏ- 11% of the RDI
விட்டமின் கே- 116% of the RDI
விட்டமின் பி9- 14% of the RDI
பொட்டாசியம்- 8% of the RDI
பாஸ்பரஸ்- 6% of the RDI
செலினியம்- 3% of the RDI
இதயத்துக்கு நல்லது
நன்கு சமைக்கப்பட்ட ப்ரோக்கோலி, இதய நோய்களை தடுப்பதாக சமீபத்திய ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதாவது உடலின் கெட்ட கொழுப்புகளை கரைப்பதன் மூலம் இதய நோய்களை தடுப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வின்படி, Brassica குடும்பத்தை சேர்ந்த ப்ரோக்கோலி போன்றவை இதய நோய்களின் அபாயத்தை குறைப்பதாக தெரியவந்துள்ளது.
மாரடைப்பில் இருந்து தப்பிக்க வைக்கும் உணவுகள்! இனி இளம் வயது மரணமில்லை
புற்றுநோயை எதிர்த்து போராடும்
உலகின் மிக கொடூர நோயான புற்றுநோயை எதிர்க்க ஒரே ஒரு சூப்பர் உணவு இல்லையென்றாலும், ஆரோக்கியமான டயட்டின் மூலம் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.
அப்படி புற்றுநோயை தடுக்கும் முக்கியமான sulforaphane ப்ரோக்கோலியில் அதிகம் நிறைந்திருப்பதால் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கிறது.
புரோஸ்டேட் புற்றுநோய் வராமலும், அதேசயம் சிகரெட் புகை போன்ற காற்றிலுள்ள நச்சுக்களை நீக்குவதாலும் அதுதொடர்பான புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.
மறந்தும் கூட சாதாரண அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்! கொடூர புற்றுநோயாக இருக்கலாம்
கண்களுக்கு நல்லது
கடந்த 2003 மற்றும் 2006ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி, ப்ரோக்கோலியில் உள்ள lutein மற்றும் zeaxanthin போன்றவைகள் வயது மூப்பினால் வரும் கண் நோய்கள் வராமல் தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதிலுள்ள பீட்டா கரோட்டின்கள், விட்டமின் ஏவாக மாறுவதால் இரவு நேர பார்வை குறைபாடு, கண்புரை போன்ற நோய்களும் அண்டாது.
பலரும் வேண்டாமென ஒதுக்கும் பொன்னாங்கண்ணி கீரையில் இத்தனை பயன்களா?
ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும்
ப்ரோக்கோலியில் உள்ள indole-3-carbinol நம் உடலின் oestrogen ஹார்மோன் அளவை சமன்செய்கிறது.
இதனால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் அபாயம் குறைகிறது.
ஆண், பெண் இருவருக்குமே இனப்பெருக்கம் தொடர்பான புற்றுநோய்கள் வராமல் தடுக்கும்.
பெண்களை பாதிக்கும் கருப்பை நீர்க்கட்டி
கொலஸ்ட்ராலை குறைக்கும்
கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட ப்ரோக்கோலியை தொடர்ந்து உட்கொள்ளும் போது கெட்ட கொலஸ்ட்ரால்கள் கரைக்கப்படும், அதாவது செரிமான மண்டலத்தில் உள்ள அமிலங்கள் எளிதாக உணவை கரைக்க உதவி புரிகிறது.
இதன்மூலம் தேவையில்லாத கொழுப்புகள் கரைக்கப்பட்டு எளிதில் நச்சுக்களாக வெளியேறிவிடும்.
மேலும் செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக இருப்பதால் கிருமித் தொற்றுகளினால் ஏற்படும் நோய்களின் அபாயம் குறைகிறது.
இதை சாப்பிட்டால் இடுப்பு தொடை பகுதியில் உள்ள கொழுப்பு தானாக கரையுமாம்
எலும்புகளின் ஆரோக்கியம்
ப்ரோக்கோலியில் இருக்கும் கால்சியம் மற்றும் விட்டமின் கே சத்துக்கள் எலும்புகளி்ன் அடர்த்தியை அதிகப்படுத்தும்.
இதுதவிர மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் ஜிங்க் போன்ற எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவையான தாதுச்சத்துக்களும் ப்ரோக்கோலியில் உள்ளன.
எனவே வளரும் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ப்ரோக்கோலியை சாப்பிட்டு வருவது நல்ல பலனை கொடுக்கும்.
கழுத்து வலியா? இஞ்சியுடன் இதை சேர்த்து குடிங்க
உடல் எடையை குறைப்பவர்களுக்காக
கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த ப்ரோக்கோலி செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.
இதை சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்தது போன்ற உணர்வு ஏற்படுவதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு நல்லது.
மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்திவிடுகிறது, எனவே டயட்டில் இருப்பவர்கள் சாலட் போன்றவைகளில் இதை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பாக சைவ உணவுப் பிரியர்களுக்கான புரதச்சத்தும் ப்ரோக்கோலியில் அதிகம் காணப்படுகிறது.
தாறுமாறாக எடையைக் குறைத்த பிரபல நடிகை! எடுத்துக்கொண்ட டயட் என்ன தெரியுமா?
உடலின் நச்சுக்களை நீக்குகிறது
ப்ரோக்கோலியில் இருக்கும் நார்ச்சத்துக்கள், உடலின் கழிவுகளை நீக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது.
மேலும் ப்ரோக்கோலியில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்டுகள் ஒட்டுமொத்தமாக உடலை சுத்தப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
விட்டமின் சி, காப்பர் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் சருமத்தில் கிருமிகள் சேர்வதை தடுப்பதால் அழகான ஆரோக்கியமான மேனியை பெறலாம் என்பது உறுதி.
சீரகம் நல்லது தான்.. ஆனால் இந்த பக்கவிளைவு உண்டாம்! எச்சரிக்கை செய்தி
அனைவரும் சாப்பிடலாமா?
ப்ரோக்கோலி ஆரோக்கியமானது என்றாலும், தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் எடுத்துக்கொள்வது நல்லதல்ல என மருத்துவ ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஏனெனில் தைராய்டு உற்பத்திக்கு தேவையான அயோடின் சத்தை உறிஞ்சுவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் தைராய்டு நோயாளிகள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
அதிகளவு நார்ச்சத்து கொண்ட ப்ரோக்கோலி செரிமானத்துக்கு நல்லது என்றாலும், வாயுத்தொல்லை பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள், inflammatory bowel disease (IBD) மற்றும் Crohn’s disease போன்ற தொந்தரவு கொண்டவர்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.