பலரும் வேண்டாமென ஒதுக்கும் பொன்னாங்கண்ணி கீரையில் இத்தனை பயன்களா?
“கீரைகளின் ராஜா” ”ஏழைகளின் தங்க பஷ்பம்” என்றழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு.
பொன்னாங்கண்ணி கீரை
நீர்வளம் நிறைந்த அனைத்து பகுதிகளில் படர்ந்து காணப்படும், பொன்னாங்கண்ணி கீரை, மண்ணில் உள்ள பொன் சத்தை உறிஞ்சி நீரான நிலையில் தன்னுள் பெற்று இருக்கிறது.
இக்கீரைக்கு கொடுப்பை, சீதை, சீதேவி என்னும் வேறு பெயர்களும் உண்டு.
இதில் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
சீமை பொன்னாங்கண்ணி - சிவப்பு நிறத்தில் பெரும்பாலும் அழகுக்காக வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணமும் குறைவு.
நாட்டு பொன்னாங்கண்ணி - பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணி தான் உடலுக்கு நன்மை பயக்கும்.
காசம் புகைச்சல் கருவிழிநோய் வாதமனல்
கூசும் பீலீகம் குதாங்குர நோய் பேசி வையால்
என்னாங் காணிப்படிவம் எமம் செப்ப லென்னைப்
பொன்னாங்கண்ணிக் கொடியைப் போற்று
என்ற அகத்தியரின் பாடல் பொன்னங்கண்ணிக் கீரையின் மருத்துவக் குணத்தைக் கூறுகிறது.
இந்தப் பாடலின் பொருள் என்னவென்றால் பொன்னாங்கண்ணிக் கீரை காச நோய், இருமல், கண்நோய்கள், வெப்ப நோய்கள், வாத நோய்கள் போன்றவற்றை குணமாக்கக் கூடிய சிறந்த உணவாகும் என்பது தான்.
மேலும் படிக்க- இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க கர்ப்பமா இருக்கீங்கன்னு அர்த்தம்
சத்துக்கள்
பொன்னாங்கண்ணியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்றவை உள்ளன.
பொன்னாங்கண்ணிக்கீரை குளிர்ச்சியை தரவல்லது. இதில் செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள், பல ஸ்டிரால்கள், அமிலங்கள் உள்ளன.
சிட்ரோஸ்டிரால், சிட்சுமோஸ்டிரால், கெஃம்பெஸ்டிரால், ஓலியனோலிக் அமிலம், லுபியால் போன்றவை பொன்னாங்கண்ணியில் காணப்படுகின்றன.
மருத்துவ பயன்கள்
- கண்பார்வைக்கு மிகவும் நல்லது.
- சருமத்துக்கு மிகவும் நல்லது.
- மூல நோய், மண்ணீரல் நோய்களை சரிப்படுத்தும் ஆற்றல் உடையது.
- ரத்தத்தைச் (Blood) சுத்தீகரிக்கும்
- உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
- வாய் துர்நாற்றத்தை நீக்கும்.
- இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.
மேலும் படிக்க- பப்பாளி சாப்பிட்டால் பக்கவிளைவுகளும் உண்டாம்! உங்களுக்கு தெரியுமா?
எப்படி சாப்பிடலாம்?
கண் கோளாறுகள்- பொன்னாங்கண்ணிக் கீரையை பச்சையாகவோ அல்லது சமையல் செய்தோ தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பகலில் கூட நட்சத்திரங்களைப் பார்க்கலாம் என்பார்கள்.
அந்த அளவுக்கு கண்களுக்கு பலன்களை கொடுக்கும் சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன, அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் கண்ணாடி அணிய வேண்டிய தேவையே இருக்காது.
உடல் எடை குறைய- பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகு மற்றும் உப்பு சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
உடல் புத்துணர்ச்சிக்கு- பொன்னாங்கண்ணி கீரையை மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும், உடலுக்கும் புத்துணர்ச்சி உண்டாகும்.
மாலைக்கண் நோய் சரியாக- மாலைக்கண் நோய் பிரச்சனை இருந்தால் பொன்னாங்கண்ணி இலையை வதக்கி வெண்ணெயுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
உடல் சூடு குறைய- பொன்னாங்கண்ணி இலைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் உச்சந்தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும். பிறகு ஷாம்பு கொண்டு கூந்தலை அலசி வந்தால் உடல் உஷ்ணம் வெகுவாக குறையும்.
மூலநோய் குணமாக- பொன்னாங்கண்ணி கீரையை சாறாக்கி அதில் கேரட் சம அள்வு கலந்து விடவும். இதில் சிட்டிகை கல் உப்பு சேர்க்கவும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூலத்துக்கு தீர்வாக இருக்கும்.
உடல் எடை அதிகரிக்க- பொன்னாங்கண்ணி கீரையில் கால்சியம் சத்து மிகுதியாக இருப்பதால் எலும்புகள், மற்றும் பற்கள் உறுதியாகின்றன. உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் பொன்னாங்கண்ணி இலையை துவரம் பருப்புடன் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எடை அதிகரிக்கும்.
ரத்தத்தை சுத்தப்படுத்த- பொன்னாங்கண்ணி கீரையை சிறிது சிறிதாக நறுக்கிவிட்டு, பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
மேலும் படிக்க- தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் என்ன நடக்கும்?
பொன்னாங்கண்ணி கீரை தைலம்
பொன்னாங்கண்ணிக் கீரையைத் தைலமாகத் தயாரித்தும் பயன்படுத்தலாம்.
அதாவது கீரையின் சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்ச வேண்டும். மெழுகுப்பதம் வரை கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும்.
அந்த தைலத்தை தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண் புகைச்சல், உடல் சூடு ஆகிய பிரச்சினைகள் சரியாகும். புத்துணர்வும் கிடைக்கும். கண் பார்வையும் தெளிவாகும்.
வீட்டிலேயே எளிதில் வளர்க்கலாம்
பொன்னாங்கண்ணியின் கீரையின் தண்டுகளை கிள்ளி மண்ணில் ஊன்றி வைத்தாலே கீரை செடி நன்றாக வளர்ந்துவிடும், பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இந்த பொன்னாங்கண்ணி கீரை வாரம் ஒருமுறையேனும் உணவில் சேர்த்து வந்தால் பல நோய்கள் நம்மை அண்டாது என்பது நிச்சயமே!!!!
மேலும் படிக்க- முருங்கைக்காய் ஏன் சாப்பிட வேண்டும்? அதிலுள்ள பலன்கள் பற்றி தெரியுமா?