ஒரு இரவுக்கு 8 கோடியாம்.. உலகிலேயே மிக விலையுயர்ந்த ஹோட்டல் எங்குள்ளது தெரியுமா?
உலகில் சாதாரண மக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு ஆடம்பரமான இடங்கள் பல உள்ளன.
நம்முடைய கற்பனைக்கும் எட்டாத ஆடம்பர வசதிகளுக்கு பெயர் பெற்ற பணக்கார ஹோட்டல்களை காணொளிகள் மற்றும் புகைப்படங்களில் பார்த்திருப்போம்.
ஆனால் பணக்காரர்களால் கூட தங்க முடியாத உலகின் மிக விலையுயர்ந்த ஹோட்டல் அறை எங்குள்ளது என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்போம்.
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சொகுசு ஹோட்டல்கள் இருந்தாலும், துபாயில் இருக்கும் ஹோட்டல்கள் தனித்துவமானதாக இருக்கும். துபாயில் அமைந்துள்ள அட்லாண்டிஸ் தி ராயலில் உள்ள ராயல் மேன்ஷன் சூட் அதன் ஆடம்பரம் மற்றும் அதன் கட்டணத்திற்காக உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது.
ஆடம்பரத்தின் உச்சமான இரண்டு மாடி சூட் உலகின் மிக விலையுயர்ந்த ஹோட்டல் தங்கும் அறை என்ற பட்டத்தை பெற்றுள்ளது.
அந்த வகையில், ராயல் மேன்ஷன் சூட் ஹோட்டல் பற்றிய விவரங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
அதிகப்படியான கட்டணம் ஏன்?
ஊடக அறிக்கைகளின்படி, ராயல் மேன்ஷனில் ஒரு இரவு தங்குவதற்கான கட்டணம் $1,00,000 அறவிடப்படுகிறது. இந்திய மதிப்பு கிட்டத்தட்ட ரூ.8.65 கோடி. இந்த ஹோட்டலில் தங்குவதற்கு பதிலாக இந்தியாவின் பணக்கார நகரங்களில் ஒரு ஆடம்பரமான பங்களா மற்றும் ஒரு சொகுசு காரையே வாங்கிவிடலாம்.
இங்கு, இரண்டு தளங்கள், நான்கு படுக்கையறைகள், ஒரு காற்றோட்டமான லிவிங் ரூம், டைனிங் ஹால், சமையலறை, பார், விளையாட்டு அறை மற்றும் ஒரு அலுவலகம் ஆகியன உள்ளன.
சிறப்பு
ராயல் மேன்ஷன் சூட் சுமாராக 5,124 சதுர அடி மொட்டை மாடி, அரேபிய கடல் மற்றும் Palm தீவின் அழகிய காட்சிகள் கொண்ட ஆடம்பரமான நீச்சல் குளம் உள்ளது. இந்த பிரம்மாண்டமான அட்லாண்டிஸ் தி ராயல் ஹோட்டல் கெர்ஸ்னர் இன்டர்நேஷனலுக்குச் சொந்தமானது.
இது One&Only மற்றும் SIRO போன்ற உலகின் முன்னணி பிராண்டுகள் இதனை இயக்குகிறது. இந்த நிறுவனம் தற்போது 2020 முதல் அதன் தலைமை நிர்வாக அதிகாரி பிலிப் ஜூபரால் வழிநடத்தப்படுகிறது.
தனித்துவமான சேவைகள்
- ராயல் மேன்ஷன் ஹோட்டல் பிரத்யேக மற்றும் தனித்துவமான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறது.
- வாடிக்கையாளர்கள் விரும்பும் உணவுகளை வழங்கும் பட்லர் சேவையை வழங்குகிறது. இது போன்று இங்கு வழங்கப்படும் ஒவ்வொரு சேவையும் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த ஹோட்டலில் தங்கும் மேன்ஷன் விருந்தினர்கள் செக்-இன் செய்ய வேண்டிய அவசியமில்லை. ராயல் மேன்ஷனின் விருந்தினர்கள் ஒரு தனியார் நுழைவாயில் வழியாக வந்து, சூட்டுக்கு தங்கள் சொந்த லிஃப்டை பயன்படுத்தலாம்.
- ஒரு பிரத்யேக பட்லர் மற்றும் கன்சியர்ஜ் குழு 24/7 கிடைக்கிறது, இது விருந்தினர்களின் ஒவ்வொரு விருப்பத்தையும் பூர்த்தி செய்யும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |