மறந்தும் கூட சாதாரண அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்! கொடூர புற்றுநோயாக இருக்கலாம்
உலகின் மிக கொடூரமான நோய்களில் புற்றுநோய்க்கு என்றுமே முக்கிய இடமுண்டு, இந்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சின்ன சின்ன அறிகுறிகளை கூட அலட்சியப்படுத்தாமல் என்னவென்று நாம் கண்டறிந்து கொள்ள வேண்டும்.
ஆரம்ப கால கட்டங்களிலேயே அறிகுறிகள் மூலம் புற்றுநோயை கண்டறிந்துவிட்டால், குணப்படுத்தி விடலாம்.
முதலில் லேசாக தொடங்கி பிறகு உயிரணுக்கள் வரை பரவக் கூடியது புற்றுநோய் செல்கள், புற்றுநோயில் ஏராளமான வகைகள் உள்ளன.
மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய், வாய் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் என பலவகைகள் உள்ளன.
காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
அறிகுறிகள்
எந்த புற்றுநோய்க்கும் பொதுவான அறிகுறி என்பது ”எடை குறைதல்”. காரணமே இல்லாமல் எடை குறைந்தால் எதனால் என்று அறிந்து கொள்வது அவசியமாகிறது.
வாய்ப்புற்றுநோய் ஏற்பட்டவருக்கு பல் விழுதல், பல் துலக்குகையில் ரத்தக் கசிவு, வாயில் கட்டிகள் தென்படுதல் அறிகுறிகளாகும்.
நுரையீரல் புற்றுநோய் இருப்பவருக்கு தொடர் இருமல், சளி, மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை இருக்கலாம்.
வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகளாக பசியின்மை உள்ளிட்டவையும், எலும்பு புற்றுநோயின் அறிகுறிகளாக கை, கால்களில் ஆங்காங்கே சிறு சிறு கட்டிகளும் ஏற்படலாம்.
ஆளி விதைகளை தொடர்ந்து சாப்பிட்டால் என்ன நடக்கும்?
இதுதவிர,
- தொடர் இருமல், குரலில் கரகரப்பு, முழுங்குவதில் தொடர் சிரமம்
- அடிக்கடி உடல் சோர்வு
- தொண்டையில் அடைப்பு போல் தோன்றுதல்
- தொடர்ச்சியாக மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு
- சிறுநீர் அல்லது மலத்தில் ரத்தம்.
- உடலில் ஆங்காங்கே கட்டிகள் தோன்றுதல்
- உடலில் உள்ள மச்சங்கள் அல்லது மருக்கள் பெரிதாகுதல்
- சாப்பிட்டவுடன் அசௌகரியமாக உணர்தல், செரிமானமின்மை
- விவரிக்கமுடியாத தசைவலி மற்றும் உடல் வலி
- இரவில் அதிகமாக வியர்த்தல்
புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?
* காய்கறிகள், பழங்கள், தானியங்கள் என சரிவிகித உணவை உட்கொள்ளுதல்
* துரித உணவுகள், ஆரோக்கியமற்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்தல்
* புகையிலை, மது, போதை பழக்கத்தை அடியோடு விட்டுவிடுதல்
* தினந்தோறும் 30 நிமிட உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொள்ளுதல்
* வீடு மற்றும் சுற்றுப்புறத்தை அசுத்தம் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல்.
* சூரிய ஒளியிலிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் தோல் புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரித்துவிடும், எனவே வெளியில் செல்லும் போது Lotionகளை பயன்படுத்தலாம்.
* உடல் எடையை அதிகரிக்காமல் ஆரோக்கியமான உணவுகளின் மூலம் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ளுதல்
குறிப்பு- உங்களுக்கு அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் மருத்துவரை கலந்து ஆலோசித்து முறையான screening exams-யை செய்து கொள்வது அவசியம்.