பெண்களை பாதிக்கும் கருப்பை நீர்க்கட்டி: இந்த அறிகுறியை அலட்சியப்படுத்தாதீங்க

pcod problem pcod problem symptoms
By Manchu Apr 01, 2022 02:50 PM GMT
Manchu

Manchu

Report

இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்களின் முக்கிய பிரச்சினையாக மாறி வருகின்றது சினைப்பை நீர் கட்டி(Poly Cystic Ovarian Disease).

இந்த PCOD பிரச்சினையினால் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் சில பெண்கள் கருத்தரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனைக் குறித்து விரிவாக தற்போது தெரிந்து கொள்ளலாம்.

கருப்பை நீர்கட்டி அறிகுறிகள்

குழந்தையின்மை: சூலகத்தில் சிறு சிறு நீர் கட்டிகள் பரவலாக காணப்படுவ தால் சினை முட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவருவது தடைபடுகிறது. இதனால் பெண்கள் கருத்தரிப்பதில் சிரமங்கள் ஏற்படுகிறது.

ஹார்மோன் குறைபாடு: சூலக நீர்க்கட்டிகளை உடைய பெண்களுக்கு ஆண் தன்மை ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது.

ஒழுங்கற்ற மாதவிடாய்: சூலக நீர்க்கட்டிகள் உடைய பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாக வராது. 2 - 3 மாதங்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி வரும். சிலருக்கு இரத்தப் போக்கு குறைவாக இருக்கும். சிலருக்கு மிகுதியாக இருக்கும்.

முகத்தில் முடி வளர்தல்: ஆண்மைத் தன்மை பெண்களுக்கு ஏற்படுவதால் ஆண்களைப் போல இவர்களுக்கு லேசாக முகத்தில் (மேலுதடு, கீழ்தாடை) முடி வளர ஆரம்பிக்கிறது. உடலிலும் (மார்பு, முதுகு, அடிவயிறு, தொடை, கைகளில்) முடி வளரலாம்.

எடை அதிகரித்தல்: மாதவிடாய் தள்ளிப் போவதால் உடல் எடை அதிகரிக்கிறது. முகப்பருவும் ஏற்படும்.

நிற மாற்றம்: உடலில் சில இடங்களில் (கழுத்து, தொடையின் உட்பகுதி, அக்குள் பகுதி) கருமை நிறம் அதிகரித்து காணும். இந்த அறிகுறிகள் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் இருக்கும் என்றில்லை.

பெண்களை பாதிக்கும் கருப்பை நீர்க்கட்டி: இந்த அறிகுறியை அலட்சியப்படுத்தாதீங்க | Neer Katti Symptoms In Tamil

கருப்பை நீர் கட்டி வர காரணம் என்ன?

மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் விடாய் தாமதம் ஏற்படும்.

மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன.  

பெண்களை பாதிக்கும் கருப்பை நீர்க்கட்டி: இந்த அறிகுறியை அலட்சியப்படுத்தாதீங்க | Neer Katti Symptoms In Tamil

சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல சிகிச்சையளிக்க வேண்டும்.

 இந்நோய்க்கான காரணத்தை உறுதியாக கூற முடியாது பருவமடைந்த பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் இந்நோய் ஏற்படலாம்.

ஆனால் இதன் அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில் தான் வெளியில் தெரிகிறது. மரபணு மூலமாக, பரம்பரை பரம்பரையாகக் கூட வரலாம்.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், அட்ரீனல் காட்டிகல் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பது, டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக சுரப்பது, புரோலாக்டின் அதிகரிப்பது தான் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.

பெண்களை பாதிக்கும் கருப்பை நீர்க்கட்டி: இந்த அறிகுறியை அலட்சியப்படுத்தாதீங்க | Neer Katti Symptoms In Tamil

கருப்பை நீர்க்கட்டி பரிசோதனை என்ன?

ஸ்கேன் செய்வதன் மூலம் சினைப்பை நீர்க்கட்டிகளை உறுதிப்படுத்தலாம்.

ஹார்மோன்கள் சோதனை செய்வதன் மூலமும் கண்டறியலாம்.

பெண்களை பாதிக்கும் கருப்பை நீர்க்கட்டி: இந்த அறிகுறியை அலட்சியப்படுத்தாதீங்க | Neer Katti Symptoms In Tamil

ஆலோசனைகள்

உடல் எடையை குறைத்தல்

உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.   

உணவு கட்டுப்பாட்டு, அதிக கொழுப்பு மிக்க பால் பொருட்கள், சாக்லேட், ஐஸ்கிரீம், ஆட்டிறைச்சி, எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், இனிப்பு வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டும் தவிர்த்தல் நல்லது.

காய்கறி, கீரை இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

புகைப்பிடிக்கும் பெண்களாக இருந்தால் அந்த பழக்கத்தை அறவே விடவேண்டும்.

பெண்களை பாதிக்கும் கருப்பை நீர்க்கட்டி: இந்த அறிகுறியை அலட்சியப்படுத்தாதீங்க | Neer Katti Symptoms In Tamil

மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்?

14 வயதாகியும் மாதவிலக்கு ஆரம்பிக்கவில்லை.

 ஒரு வருடத்தில் 8 க்கும் குறைவான மாதவிடாய்.

மார்பு, முகத்தில் முடிவளர்தல், முகத்தில் அதிகமாக பரு

உடல் எடை அதிகரிப்பு

கழுத்து மற்றும் அக்குள் தொடை பகுதிகளிலே கருமை நிறமாற்றம் காணப்படுதல் என இவற்றில் எந்த அறிகுறிகள் ஏற்பட்டாலும் மருத்துவரை உடனே சந்திக்கவும்.

பெண்களை பாதிக்கும் கருப்பை நீர்க்கட்டி: இந்த அறிகுறியை அலட்சியப்படுத்தாதீங்க | Neer Katti Symptoms In Tamil

உணவு முறை என்ன?

விட்டமின்கள்: பெண்களின் கருமுட்டை உற்பத்திக்கு தேவைப்படும் சக்திகளில் முதன்மையானது விட்டமின் டி.

கருப்பை கோளாறுகள் வருவதற்கான காரணங்களில் 65 முதல் 85 சதவீதத்தினர் விட்டமின் டி குறைப்பட்டினால் தான் ஏற்படுகிறது. இதனால் விட்டமின் டி அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

குறிப்பாக காலை நேர வெயில்படுமாறு உங்களது தினசரிகளை மாற்றிக் கொள்ளலாம்.

இப்படிச் செய்வதனால் உங்களது மெட்டபாலிசம் தூண்டப்பெற்று மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுத்திடும்.

 பெண்களை பாதிக்கும் கருப்பை நீர்க்கட்டி: இந்த அறிகுறியை அலட்சியப்படுத்தாதீங்க | Neer Katti Symptoms In Tamil

ஆப்பிள் சிடர் வினிகர்: ஒரு கிளாஸ் சூடான நீருடன் இரண்டு டீஸ்ப்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் இரண்டு டீஸ்பூன் சேர்த்து குடிக்க வேண்டும்.

இதனை ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இப்படிக் குடிப்பதனால் உடலில் இன்ஸுலின் அளவு சீராக இருக்கும். இதனால் கருமுட்டை உற்பத்தியாவதும் மாதந்தோறும் அது உடைவதும் சீராக நடைபெறும்.

தேங்காய் எண்ணெய்: சுத்தமான தேங்காய் எண்ணெய் மூலமாக கூட கருப்பை நீர்க்கட்டிகளை நம்மால் வராமல் தடுக்க முடியும்.

இதற்கு பாக்கெட்டுகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும், அதில் கலக்கப்பட்டிருக்கும் கெமிக்கல்களால் தேங்காய் எண்ணெயின் முழு பலன் உங்களுக்கு கிடைக்காது.

தினமும் ஒரு ஸ்பூன் அளவாவது தேங்காய் எண்ணெயை உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஃபேட்டி ஆசிட், ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது.

சீரான அளவில் இதனை எடுத்துக் கொண்டால் இன்சுலின் சுரப்பை சீராக வைத்திருக்கும். அதே போல கெட்டக் கொழுப்பு ரத்தத்தில் கலப்பதையும் தடுத்திடும்.

பெண்களை பாதிக்கும் கருப்பை நீர்க்கட்டி: இந்த அறிகுறியை அலட்சியப்படுத்தாதீங்க | Neer Katti Symptoms In Tamil

ஆமணக்கு எண்ணெய் : ஆமணக்கு எண்ணெயை லேசாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான பருத்தித் துணியைக் கொண்டு எண்ணெயில் முக்கி அடிவயிற்றில் ஒத்தடம் கொடுத்திடுங்கள் அப்படியில்லை என்னில் ஆமணக்கு எண்ணெயை வயிற்றில் தடவிக்கொண்டு ஹாட்பேக் ஒத்தடம் கொடுக்கலாம்.

பின்னர் வயிற்றை சுத்தமாக துடைத்துவிடுங்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை இப்படிச் செய்யலாம். ஆமணக்கு எண்ணெய் சருமத்தில் ஊடுருவும் ஆற்றல் கொண்டது.

அதோடு உள்ளுருப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் ஹார்மோன் மாற்றம் ஏற்படாது, இதனால் கருப்பை கோளாறுகள் ஏற்படாது.

பெண்களை பாதிக்கும் கருப்பை நீர்க்கட்டி: இந்த அறிகுறியை அலட்சியப்படுத்தாதீங்க | Neer Katti Symptoms In Tamil

க்ரீன் டீ : சூடான நீரில் க்ரீன் டீ மற்றும் தேன் கலந்து குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் க்ரீன் டீ வரை குடிக்கலாம். இதிலிருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் கருப்பை சீராக வேளை செய்வதற்கான ஹார்மோன்களை தூண்டிடும்.

அதிக எடை கூட கருப்பை கோளாறுகள் வருவதற்கு ஒரு வகை காரணமாக இருக்கிறது. க்ரீன் டீ குடிப்பதனால் கெட்ட கொழுப்புகள் உடலில் சேராது. இதனால் அதீத உடல் எடையும் தவிர்க்கப்படும்.

பெண்களை பாதிக்கும் கருப்பை நீர்க்கட்டி: இந்த அறிகுறியை அலட்சியப்படுத்தாதீங்க | Neer Katti Symptoms In Tamil

கற்றாழை : கற்றாலை ஜூஸ் காலை உணவுக்கு முன்பு சாப்பிட்டு வர வேண்டும். இதனை தினமும் கூட சாப்பிடலாம். கற்றாழையில் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலை நீக்கும் ஆற்றல் கொண்டது. அதோடு கருப்பை இயங்குவதற்கான ஆற்றலையும் கொடுக்கிறது.

மாதவிடாய் பிரச்சனையிருப்பவர்கள் இதனை தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதோடு கருப்பை நீர்க்கட்டிகள் வராமல் தடுத்திடும்.

நெல்லிக்காய் : ஒரு டம்பளர் நீருடன் அரை கப் நெல்லிச் சாறு கலந்து குடிக்க வேண்டும். இதனையும் நீங்கள் தினமும் குடிக்கலாம். உங்களுக்கு வேறு சில உடல் உபாதைகள் அல்லது செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது.

முக்கியமாக இதில் சூப்பராக்ஸைடு டிஸ்முடேஸ் (SOD) என்னும் உட்பொருள் உள்ளது. இது ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து பாதுகாப்பளித்து, புற்றுநோயில் இருந்து நம்மைத் தடுக்கும்.

நெல்லிக்காய் உடலில் உள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, உடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்யும். மேலும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் இரத்தணுக்களின் அளவு அதிகரிக்கும்.

பெண்களை பாதிக்கும் கருப்பை நீர்க்கட்டி: இந்த அறிகுறியை அலட்சியப்படுத்தாதீங்க | Neer Katti Symptoms In Tamil

சீரகம் : தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது.

நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும். சீரகத்தில் இருக்கும் டாக்ஸின்கள் ரத்ததை சுத்தப்படுத்துகிறது, அதோடு உடலில் தேவையற்ற கொழுப்புகளை நீக்க உதவுகிறது.

பெண்களை பாதிக்கும் கருப்பை நீர்க்கட்டி: இந்த அறிகுறியை அலட்சியப்படுத்தாதீங்க | Neer Katti Symptoms In Tamil

வெந்தயம் : நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன.

வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது.  

பெண்களை பாதிக்கும் கருப்பை நீர்க்கட்டி: இந்த அறிகுறியை அலட்சியப்படுத்தாதீங்க | Neer Katti Symptoms In Tamil

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US