கமெரா முன்பு கண்ணீர் சிந்திய அசீம்! கம்பீரமாக இருந்தவருக்கு நடந்தது என்ன?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து ரசிகர்களின் பெரும் வரவேற்பினை பெற்று வரும் அசீம் கமெரா முன்பு நின்றுகொண்டு கண்ணீர் மல்க பேசிய விஷயம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6ல் சுமார் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், இந்நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கின்றது.
நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், போட்டியாளர்களும் தீவிரமாக விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே சுற்றுக்கு டாஸ்க் வைக்கப்பட்டிருந்தது. இதில் கடினமான பல டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில், போட்டியாளர்களிடையே கடும் வாக்குவாதங்களும் எழுந்தது.
என்னதான் சண்டை ஏற்பட்டாலும் போட்டி முடிந்த பின்பு போட்டியாளர்கள் தங்களுக்குள்ளே ஜாலியாக கலாய்த்துக் கொண்டும் இருக்கின்றனர்.
கமெரா முன்பு கண்கலங்கிய அசீம்
இந்நியலையில் அசீம் கமெரா முன்பு நின்று கொண்டு, கண்கலங்கிய படி தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளதது ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
பிக்பாஸ் வீட்டிற்குள் கடுமையான சொற்களால் மற்றவர்களை பேசுவது, டாஸ்க் என்று வந்துவிட்டால் சிங்கமாக திகழும் அசீம், எவிக்ஷன் லிஸ்டில் பெயர் வந்துவிட்டாலே முதல் ஆளாக மக்களால் காப்பாற்றப்பட்டுவிடுகின்றார்.
அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள அசீம் டைட்டில் வின்னராகவும் வாய்ப்புவுகள் அதிகமாக இருக்கின்றது.
சமீபத்தில் தனது மகன் ரயான் குறித்த விஷயங்களை பிக்பாஸ் வீட்டில் கமெரா நின்று கொண்டு பேசியது மட்டுமின்றி மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் கூறியுள்ளார்.
அசீம் பேசுகையில், "இன்னைக்கு என் பையன் ரயானுக்கு பிறந்தநாள். ஹாப்பி பர்த்டே ரயான். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எப்பவும் எல்லா வருஷமும் உன்ன பார்ப்பேன், உன் கூட இருப்பேன். இந்த வருஷம் உன் கூட இருக்க முடியல.
Finale முடிச்சிட்டு, டைட்டில் வின் பண்ணிட்டு உன்னை வந்து பார்க்குறேன். லவ் யூ பேபி. ஹாப்பி பர்த்டே" என கூறியபடி கண் கலங்கும் அசிம், அங்கிருந்து சென்றுள்ளார்.
அசீம் மகன் மீது வைத்திருந்த பாசத்தினை ரசிகர்கள் புகழ்ந்து வருவதுடன், பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.