கமல் முன்பு மயங்கிவிழுந்த போட்டியாளரை எச்சரித்த பிக்பாஸ்: எதிர்பாராமல் அரங்கேறிய சண்டை
பிக்பாஸ் வீட்டில் ஏடிகே அசீம் இருவருக்கும் இடையே பினாலே டிக்கெட் டாஸ்கினால் சண்டை ஏற்பட்டுள்ளது.
பினாலே டிக்கெட் டாஸ்க்
பிக்பாஸ் வீட்டில் தற்போது டிக்கெட் பினாலே டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எட்டாவது டாஸ்க் நடைபெற்றுவரும் நிலையில், போட்டியாளர்களிடையே கடும் சண்டையும் நிலவி வருகின்றது.
குறித்த டாஸ்கில் போட்டியிட்டு வெற்றிபெறும் போட்டியாளர், முதல் இறுதிபோட்டியாளராக தெரிவு செய்யப்படுவார். அவரை சக போட்டியாளர்கள் இனி நாமினேஷன் செய்யமுடியாது.
இந்நிலையில் குறித்த டாஸ்க் சக போட்டியாளர்களிடையே கடும் சண்டையையும் கிளப்பி வருகின்றது. இன்று எதிர்பாராத விதமாக ஏடிகே அசீம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு கமல்ஹாசன் எபிசோட்டின் போது ஏடிகே மயங்கிவிழுந்த நிலையில், அவருக்கு சிறுநீரகத்தில் கல்லடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் இனிமேல் புகைபிடிக்கக்கூடாது என்று அறிவுரை கூறியும் கேட்காத ஏடிகே மீண்டும் மீண்டும் புகைபிடித்துள்ளார். இதனால் கடுப்பான பிக்பாஸ், ஏடிகே-வை வெளியே அனுப்பிவிடுவதாக எச்சரித்துள்ளார்.