ஆட்டத்தையே மாற்றியமைத்த போட்டியாளர்! கமலையே வியக்கவைத்த நபர் யார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் ஆட்டத்தையே மாற்றியமைத்த போட்டியாளர் குறித்து பிரமிப்பாக பேசியுள்ள காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃபினாலே டாஸ்க் நடைபெற்ற நிலையில், இதில் அமுதவானன் முதல் வெற்றியாளராக உள்ளே செல்ல உள்ளது ரசிகர்களுக்கு தெரிந்தவிடயமே.
எவிக்ஷின் கடைசி நபராக இருந்து இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அமுதவானன், பயங்கரமாக விளையாடி அதிக மதிப்பெண்களை பெற்று வருகின்றார்.
தற்போது ஃபினாலே டிக்கெட் மூலம் ரசிகர்கள் எதிர்பார்த்த எவிக்ஷன் தவிடுபொடியாகியுள்ளது. இன்று கமல்ஹாசன் நிகழ்ச்சியில் ஃபினாலே டிக்கெட் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.
அதிலும் கமல்ஹாசன் கூறியது என்னவெனில், இவரது வெற்றி ஆட்டத்தையே மாற்றியமைத்துள்ளது என்று கூறியுள்ளார். அவர் கூறிய போட்டியாளர் அமுதவானன் என்பது பார்வையாளர்கள் ஓரளவிற்கு கணித்துள்ளனர்.