ஜெயிலில் இருந்து ரிலீஸான கண்ணம்மா: இஷ்டத்துக்கு பணத்தை செலவு செய்யும் பாரதி! வெளியானது முதல் ப்ரோமோ காட்சி
பாரதி கண்ணம்மா முதலாம் பாகம் முடிந்த கையோடு அடுத்த அத்தியாயத்தை இன்று ஆரம்பித்துள்ளனர். இதில் இரண்டாம் பாகத்தின் புதிய எபிஸோட் இன்று வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா 2
பாரதி கண்ணம்மா தொடரின் முதலாம் பாகம் கடந்த வாரம் முடிவடைந்துள்ளது. எப்படா முடிப்பார்கள் என்று காத்திருந்த மக்களுக்கு தற்போது கதையை முடித்து விட்டு திரும்புவதற்குள் பாகம் இரண்டை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து விட்டார்.
இந்த தொடரிலும் அதே பாரதி கண்ணம்மாவா என எதிர்ப்பார்த்தவர்களுக்கு பாதி மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறார்கள். இதில் பாரதியாக சன் டிவி ரோஜா சீரியல் புகழ் சிப்புதான் இந்த தொடரில் நடிக்கிறார்.
இதில் கண்ணம்மாவாக அதே வினுஷா தான் நடிக்கிறார். மேலும், இதன் முதல் ப்ரோமா அண்மையில் வெளியிட்டு மக்களுக்கு சில தகவல்களை மறைமுகமாக கொடுத்திருந்தார்கள்.
இன்றைய எபிசோட்
இந்நிலையில், இன்றைய தினத்திற்கான புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். இதில் பணக்கார குடும்பத்தைச் சார்ந்த பாரதி அப்பாவின் சொத்துக்களை கவனித்துக் கொள்ளாமல் ஊதாரியாக ஊர் சுற்றி வருகிறார்.
25ஆவது வயது பிறந்த தினத்தை கொண்டாடும் பாரதியைப்பார்க்க பெரிய பெரிய தலைகள் எல்லாம் வருவார்கள். அப்போது பாரதியை நினைத்து கணவனின் புகைப்படத்தைப் பார்த்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார் பாரதியின் அம்மா.
அப்போது ஊதாரியாக திரியும் பாரதியிக்கு திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகி விடும் என நினைக்கும் போது, பாரதியின் அம்மா பாரதிக்கு மனைவியாக போவது யாரோ எங்கிருக்காளோ என யோசிக்க அப்படியே ஜெயிலில் சித்ரா என்ற பெயரில் கண்ணம்மா முகம் காட்டப்படுகிறது.
ஜெயிலில் இருந்து ரிலீஸாகும் சித்ராவை (கண்ணம்மா) எதிரில் வரும் தனம் என்ற பெண் சித்ராவை எச்சரிக்கும் காட்சிகள் ப்ரோமாவாக வெளியாகியுள்ளது.