பாரதி கண்ணம்மா 2 ஆட்டநாயகனாக களமிறங்கபோகும் ரோஜா சீரியல் பிரபலம்
பாரதி கண்ணம்மா சீரியல் நிறைவிற்கு வரும் நிலையில் இரண்டாம் பாகத்தில் ரோஜா சீரியல் பிரபலம் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிறைவிற்கு வரும் பாரதி கண்ணம்மா
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் முதல் இடத்தை பிடிக்கிறது.
இந்த தொடரில் ஆரம்பத்தில் அருண் மற்றும் ரோஷினி நாயகன்-நாயகியாக நடித்தார்கள்.
இதனை தொடர்ந்து திடீரென ரோஷினி பாரதி கண்ணம்மா விட்டு செல்லும் போது அவரை போலவே இருக்கும் புதிய கண்ணம்மாவாக வினுஷா களமிறக்கப்பட்டார்.
இந்த சீரியல் இயக்குநர் பல டுவிஸ்ட்டுக்களை வைத்து சீரியலை சுவாரஸ்யப்படுத்தி வீட்டிலுள்ள இல்லத்தரிசிகளை தன்வசப்படுத்திவிட்டார் என்றே கூற வேண்டும்.
இதனால் இந்த சீரியலின் கதை தெரியாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாத அளவிற்குச் சென்று விட்டது.
இதனை தொடர்ந்து பாரதியின் ரியாக்ஷனுக்கு ஏற்ற கண்ணம்மா எனும் பெயர் வரும் வரை நடித்து வருகிறார். மேலும் பாரதி கண்ணம்மாவிற்கு மீண்டும் திருமணம் செய்து முதல் பாகம் நிறைவுப் பெறவிருக்கிறது.
இரண்டாம் பாகத்தில் களமிறங்கவிருக்கும் அதிரடி கதாநாயகன்
இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் நடிகர் அருண் பாரதி கதாபாத்திரத்தில் நடிக்கமாட்டார் எனவும் அதற்கு பதிலாக பிரபல தொலைக்காட்சியில் “ ரோஜா” சீரியலில் நடித்த அர்ஜீன் (சிப்பு சூரியன்) நடிக்கவிருக்கிறார்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பிரபல தொலைக்காட்சி பகிர்ந்தால் உண்மையான தகவல் என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இவர் ரோஜா சீரியல் ஹீட்டிற்கு முக்கிய காரணம் என்றும் இவரால் பாரதியினால் புதிய திருப்பங்களுடன் சீரியல் கலக்கட்டும் எனவும் பாரதி கண்ணம்மா ரசிகர்கள் விரும்புகிறார்கள்.