வெண்பாவை திருமணம் செய்யும் பாரதி! பாரதி கண்ணம்மாவின் பரபரப்பான ப்ரொமோ
பாரதி கண்ணம்மா சீரியல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது வெண்பாவை திருமணம் செய்து கொள்ள பாரதி சம்மதம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவின் சதியால் பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எப்பொழுது ஒன்று சேர்வார்கள் என்ற எண்ணம் ரசிகர்களிடையே அதிகமாக இருந்து வருகின்றது.
குடும்பத்தில் தெரியாத பல ரகசியங்கள் அனைவருக்கும் தெரியவந்துள்ள நிலையில், குறித்த சீரியல் எப்போது முடியும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
வெண்பாவை திருமணம் செய்யும் பாரதி
இந்நிலையில் வெண்பாவின் சதியின் வலையில் வீழ்ந்த பாரதி அவரைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்துள்ளார்.
ஏற்கனவே இந்த சீரியல் முடிவிற்கு வருமா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு குறித்த காட்சி ஒரு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள பரொமோ காட்சியில் வெண்பா தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அதற்கு அப்பாவாக நீ இருக்க வேண்டும் என்றும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சுகின்றார்.
ஆரம்பத்தில் பாரதி முடியாது என்று கூறியதால், வெண்பா தற்கொலை நாடகம் நடத்தி ஒருவழியாக பாரதியை சம்மதம் தெரிவிக்க வைத்துள்ளார். இக்காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.
