சிம்புவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா: அத்தனை சொத்துக்கும் சிம்புதான் சொந்தக்காரரா?
தமிழ் சினிமா நடிகராக சுற்றி வருபவர் நடிகர் தான் சிலம்பரசன் சிம்பு. இவரின் சொத்து மதிப்பு பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிம்பு
நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, நடிகர், கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர், சிறப்பாக நடனமாடுபவர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையை கொண்டு தமிழ் திரையுலகில் பணியாற்றி புகழ் பெற்றவர்.
இவர் முதன்முதலில் 2002ம் ஆண்டு காதல் அழிவதில்லை திரைப்படத்தில் நாயகனாக நடித்து தனது திரைப்பயணத்தை தமிழில் தொடங்கினர்.
அதற்கு அடுத்து தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார். மேலும், இவரின் பேரில் பல சர்ச்சை செய்திகளும் அதிகளவாகவே இருந்து வந்தது.
இதனால் இவர் சில காலம் படங்கள் எதிலும் நடிக்காமல் விலகியிருந்து மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க ஆரம்பித்தார். அண்மையில் கூட வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பத்து தல திரைப்படம் வெளியாகவுள்ளது.
சொத்து மதிப்பு
இந்நிலையில் சமீப காலமாக, அதிகபட்சமாக சிம்பு புதிய படங்களுக்கு 20 கோடி வரை சம்பளமாக வாங்கி வருவதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனைத் தொடர்ந்து தற்போது இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது.
அதாவது பிறந்தது முதல் தற்போது வரை சினிமாவிலேயே மூழ்கி உள்ள நடிகர் சிம்புவுக்கு தனியாகவே 119 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு சொகுசு கார், பங்களா என ஏகப்பட்ட சொத்துக்கள் சிம்புவின் பெயரிலேயே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.