ஒரு வெற்றிலையில் இத்தனை நன்மைகளா? அதுவும் இதோட சாப்பிட்டால் பல நோய் உங்கள் பக்கம் வரவே வராதாம்!
நம்ம வீட்டில் இப்போதும் யாராவது ஒருத்தர் சரி வெற்றிலைப் போட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் நாம் அவர்கள் பக்கம் கூட போகமாட்டோம்.
இந்த வெற்றிலையில் எத்தனை நன்மைகள் இருக்கிறதென்று உங்களுக்கு தெரியுமா? இப்போ தெரிந்து கொள்ளுங்கள்!
வெற்றிலையானது வீட்டில் விசேட நாட்களில் அதிகம் தேடப்படுவது. அது மட்டுமல்லாமல் இது ஒரு மூலிகை இலையும் கூட இந்த வெற்றிலைக்கு தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல், மெல்லிலை போன்ற பல பெயர் உண்டு.
அதிலும் கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதாரண வெற்றிலை என பல வகைகளும் உள்ளது. வெற்றிலையில் கல்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளன.
வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது.
வெற்றிலையின் நன்மைகள்
வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
உங்களுக்கு அதிக வாய்த்துர்நாற்றம் இருந்தால் வெற்றிலையை போட்டு கொதிக்க வைத்த நீரால் வாயை கொப்பளித்தால் வாய்த்துர்நாற்றம் இல்லாமல் போகும். உணவு உண்டதும் வெறும் வெற்றிலையை மென்று தின்றாலும் வாய் துர்நாற்றம் இருக்காது, பற்களுக்கும் அதிக ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
முடி உதிர்வு இருப்பவர்கள் வெற்றிலையை நன்றாக அரைத்து அதனுடன் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் கலந்து தலைமுடியின் வேர் வரை நன்கு தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து குளித்தால் முடி உதிர்வு பிரச்சினை தீரும்.
முகத்தில் பருக்கள் இருந்தால் வெற்றிலையை அரைத்து போடலாம், வெற்றிலை போட்டு கொதிக்க வைத்த தண்ணீரால் முகம் கழுவினாலும் பருக்கள் மறையும்.
உடலில் வீசும் துர்நாற்றத்திற்கு வெற்றிலை எண்ணெய் அல்லது வெற்றிலை சாறு கலந்து குளித்து வந்தால் உடல் துர்நாற்றம் நீங்கும். தோலில் அரிப்பு, சொறி மாதிரியான பிரச்சனைகள் இருந்தால் வெற்றிலை போட்டு கொதித்த நீரால் குளிக்கலாம்.
இந்த தண்ணீரில் நாள்தோறும் குளித்து வந்தால் சரும பிரச்சினைகள் நீங்கும்.