சுருங்கிய தோலை பளபளக்கும் பலா கொட்டை மருத்துவம்! எப்படினு தெரியுமா?
பொதுவாக நாம் என்ன நோய் என்று வைத்தியசாலைக்கு சென்றாலும் பழங்கள் அதிகம் சாப்பிடுமாறு மருத்துவர் அறிவுரை கூறுவார்கள்.
இதன்படி, மாம்பழம், வாழைப்பழம், தோடம்பழம் உள்ளிட்ட பழங்களை தான் அதிகம் எடுத்து கொள்வோம்.
இதனையும் தாண்டி பலாப்பழம், கொய்யாப்பழம், ரம்பூட்டான் என பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் இருக்கிறது.
இதனால் தலைமுடி வளர்ச்சி, சரும பிரச்சினை, கால்சியம் குறைப்பாட்டால் ஏற்படும் பிரச்சினை என பல வகையான பிரச்சினைகளை இது சரிச் செய்கிறது.
அந்த வகையில் பலாப்பழத்தை விட அதிலுள்ளே இருக்கும் கொட்டையில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து பலா கொட்டை என்ன வகையான நோய்களுக்கு மருந்தாக எடுத்து கொள்கிறார்கள் என தொடர்ந்து தெளிவாக தெரிந்து கொள்வோம்.
பலாகொட்டை செய்யும் அற்புதங்கள்
1. பலாப்பழத்தில் அதிகமான தையமின் மற்றும் ரிபோ பிளேவின் ஆகிய ஊட்டசத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் கண், கூந்தல், சருமம் என பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
2. சருமம் பொலிவின்மை பிரச்சினை உள்ளவர் பேஷியல் செய்வதை விட பலாக்கொட்டை எடுத்து அரைத்து அந்த கலவையை முகத்தில் பூசி வந்தால் காலப்போக்கில் இந்த பிரச்சினையும் கட்டுப்படுத்தப்படுகிறது.
3. தோல் சுருக்கம் உள்ளவர்கள் பலா கொட்டையை வேக வைத்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் காலப்போக்கில் சருமம் சுருக்கம் இல்லாமல் இளமையாக இருக்கலாம்.
4. மனழுத்தம் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும பலா கொட்டையை அவித்து தேங்காய் பூ சேர்த்து உருண்டை அல்லது கறி செய்து சாப்பிட்டால் காலப்போக்கில் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் இல்லாமல் செய்ய முடியும்.
5. ஜீரண பிரச்சினையுள்ளவர்கள் பலா கொட்டையால் செய்யப்பட்ட உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இது நிரந்தரமாக ஜீரண கோளாறு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கலாம்.
