கிராம்பின் மருத்துவக்குணங்கள் : தினமும் இரண்டு கிராம்பு சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா?
கிராம்பின் மருத்துவ குணங்கள் கிராம்பு முக்கிய சமையல் பொருளாக மட்டுமல்ல, ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் உணவுக்கு தனி சுவை தருகிறது. கிராம்பில் என்னென்ன நன்மைகள் என்பதைப் பார்க்கலாம்.
பல்வலி
கிராம்பு பல்வலியைத் தவிர அனைத்து வருத்தங்களுக்கும் உதவும். கிராம்பு பல் வலிக்கு சிறந்த தீர்வு என்பது அனைவரும் அறிந்ததே. பல் வலிக்கும் இடத்தில் கிராம்பை வைத்து கடித்துக் கொண்டால் வலி குறையும். பல் வலி, ஈறுகளில் வலி இருக்கும் இடத்தில் கிராம்பு வைத்தால் வலியைத் தணிக்கும், பல்லுக்கு உறுதியளிக்கும்.
வாய்த்துர்நாற்றம் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 2 கிராம்புகளை சாப்பிட்டால் வாய்த் துர்நாற்றம் நீங்கும்.
நோய் எதிர்ப்பு
கிராம்பு உடலை எந்த நோய்த்தொற்றுகளுக்கும் உள்ளாகாமல் பாதுகாக்க உதவும். உடலில் உள்ள இரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்கும். இதனால் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
மலச்சிக்கல் மற்றும் செரிமானம்
கிராம்பில் விட்டமின் சி உள்ளது. செரிமானப் பிரச்சினை மற்றும் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் கிராம்பு பயன்படுத்தலாம். நாளொன்றுக்கு இரண்டு கிராம்பு சாப்பிடலாம்.
மேலும் கிராம்பு பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினைகள் தீரும்.
தலைவலி
தலைவலி உள்ளவர்களுக்கு கிராம்பு ஒரு அருமருந்தாகும். தலைவலி நேரத்தில் கிராம்பு எண்ணெய்யை தலையில் தேய்த்துக் கொண்டால் தலைவலி நீங்கும்.
பாலில் கிராம்பு மற்றும் கல் உப்பு சேர்த்துக் குடித்தால் தலைவலிக்கு நல்ல தீர்வாக அமையும்.
கல்லீரல்
கிராம்பில் உள்ள யூஜெனோல் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது இதனால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். கல்லீரலின் செயல்பாட்டை ஆரோக்கியமாக்க, நீங்கள் தினமும் கிராம்பு சாப்பிடுவது நன்மை தரும்.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
நீரிழிவு நோயாளிகள், தினம் உணவில் கிராம்பு சேர்க்க வேண்டும். கிராம்பு உங்கள் உடலில் இன்சுலின் போல வேலை செய்கிறது. அதாவது, இரத்தத்திலிருந்து அதிகப்படியான சர்க்கரையை நீக்குவதன் மூலம், அவை இரத்தத்தின் சர்க்கரை சமநிலை செய்கின்றன.
மேலும், கிராம்புகளில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளதால் புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் உடலில் புற்றுநோய் செல்கள் இறப்பை அதிகரிக்கும்.
மன அழுத்தம்
கிராம்பில் மன அழுத்தத்தை எதிர்க்கும் பண்புகள் அதிகமாக உள்ளது. மேலும் காலையில் அவற்றை மென்று சாப்பிட்டாலோ அல்லது அப்படியே வைத்திருந்தாலோ அன்றைய நாள் முழுவதும் உங்களை மிகவும் நிதானமாகவும் அமைதியாகவும் உணர வைக்கும்.