உடலில் இரும்புச்சத்து கடகடவென அதிகரிக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்
நம் உடலின் ஆரோக்கியத்துக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டசத்துக்களில் இரும்புச்சத்து மிக முக்கியமானது.
ஏனெனில் பெரும்பான்மையான புரதங்கள், நொதியங்கள் போன்றவற்றிற்கு இரும்பு ஒரு இன்றியமையாத மூலப்பொருள்.
ஆக்சிசனை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு உடலில் எடுத்து செல்லும் ஹீமோகுளோபின் , மயோகுளோபின் என்பவற்றின் உள்ளடக்கமாக இரும்பு உள்ளது.
இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் ரத்த சோகை ஏற்படலாம். உலக சுகாதார அமைப்பின் (WHO) புள்ளிவிவரப்படி, உலகளவில் 5 வயதிற்குட்பட்ட 42% குழந்தைகளும், 40% கர்ப்பிணிப் பெண்களும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே மிக எளிதாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே இரும்புச்சத்தை அதிகரிக்கும் பானம் தயாரிப்பது குறித்து தெியந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
கொட்டை நீக்கிய பேரீட்சம் பழம்- 10
உலர்ந்த திராட்சை- 10
ஏலக்காய் பொடி- சிறிதளவு
தேன்- 3 தேக்கரண்டி
தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை
முதலில் பேரீட்சை மற்றும் உலர் திராட்டை இரண்டையும் எடுத்து நன்கு சுத்தப்படுத்தி கழுவி எடுத்துக்கொள்ளவும்.
இதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும், பின்னர் இதனை மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் கடைசியாக ஏலக்காய் தூள் மற்றும் தேன் கலந்தால் அற்புதமான பானம் தயாராகிவிடும்.
இந்த பானத்தை தினமும் காலை வேளை குடித்து வந்தால் அபரிமிதமான பலன்களை பெறலாம்.
இதனை தொடர்ந்து குடித்து வந்தால் இரும்புச்சத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, இதயம் மற்றும் மூளையின் ஆற்றலை அதிகரிக்கும், கண் பார்வையை மேம்படுத்துவதுடன் தொண்டை அழற்சியை சரிசெய்கிறது.