திட்டு திட்டாக கொட்டிய இடத்தில் முடி வளர கிராம்பு தண்ணீர்: கொஞ்ச நாளிலேயே சூப்பரான ரிசல்ட்!
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது.
இதனை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம். அந்தவகையில் தற்போது உங்கள் முடி உதிர்வுக்கு சிறந்த தீர்வினை கிராம்பு கொண்டு நீக்கிவிடலாம் எப்படி தெரியுமா?
முடி உதிர்விற்கு கிராம்பு
கிராம்பானது எல்லோரது வீட்டில் இருக்கும் இருக்கும் பாரம்பரிய மருத்துவ குணங்களில் கொண்டது.
மேலும் இந்தக் கிராம்பு முக்கிய சமையல் பொருளாக மட்டுமல்ல, ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுவது மட்டுமல்லாமல் உணவுக்கு தனி சுவை தருகிறது.
இந்தனை நன்மைகளைக் கொண்ட இந்தக் கிராம்பில் உங்கள் முடி உதிர்வு பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு.
செய்முறை
1/2 தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்த பிறகு 10 கிராம்பை எடுத்து அதில் போட்டு மீண்டும் கொதிக்க வைத்து பிறகு இறக்கி ஆற விடவும்.
பாவனை முறை
இந்த கிராம்பு தண்ணீர் ஆறிய பிறகு ஒரு ஸ்ப்ரே போத்தல் ஒன்றில் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த தண்ணீரை நீங்கள் குளிக்கும் போது ஷாம்பு போட்டு குளித்து காய்ந்த பிறகு தயார் செய்து வைத்த கிராம்பு நீரை நன்றாக முடிக்கு ஸ்ப்ரோ செய்து கொள்ளுங்கள்.
பிறகு நன்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள். இவ்வாறு குளிக்கும் போது தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முடி வளர்ச்சி ஊட்டம் பெற்று வளரும்.