வாழை இலையில் ரசம் வைக்கலாம் தெரியுமா: கேள்வி பட்டிருக்கிறீர்களா?
பொதுவாக காய்ச்சல், சளி, தடுமல் எனப் பலப்பிரச்சினைகள் வந்தாலும் உடனே அம்மா வைக்கும் ரசத்தில் அத்தனையும் குணமாகிவிடும்.
அதேபோல ரசத்திலும் பல வகைகள் இருந்தாலும், நீங்கள் இதைப்பற்றி கேள்வி பட்டிருக்க மாட்டீர்கள். அது என்னவென்றால் வாழை இழை ரசம். வாழை இலையை வைத்து சாப்பிட்டு மட்டும் தான் இருக்கிறோம் அதில் எப்படி ரசம் வைப்பது என பலருக்கு கேள்வி எழும்.
அப்போ இந்த ரெசிபியை பார்த்து நீங்களும் ட்ரைப் பண்ணி பாருங்க.
தேவையான பொருட்கள்
- சிறிய பிஞ்சி வாழை இலை - 1
- தக்காளி - 1
- காய்ந்த மிளகாய் - 3
- சீரகம் - ஒரு தேக்கரண்டி
- மிளகு - ஒரு தேக்கரண்டி
- புளி - எலுமிச்சை அளவு
- பூண்டு - 8 பல்
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
- கடுகு, பெருங்காயம், வெந்தயம் - தாளிக்க
செய்முறை
வாழை இலையை நன்றாக கழுவிய பின்னர் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை துண்டுகளாக வெட்டிகெள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இளம் வாழை இலை, பூண்டு, மிளகு , சீரகம், தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம், வெந்தயம் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
மசாலா நன்கு வதங்கியதும் அதில் புளிக்கரைசல் ,உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சூடான சுவையான ஆரோக்கியமான வாழை இலை ரசம் தயார்.