தம் பிரியாணி ஸ்டைலில் தக்காளி சாதம்! இப்படி செய்து சாப்பிடுங்க... சுவையோ அபாரம்
குழந்தைகளுக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும் இந்த சுவைக்கு அனைவரின் நாக்கும் அடிமைதான் அது போலதான் பிரியாணிக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த உணவிற்கு அத்தனைப் பிரியம். சிலருக்கு சில உணவுகள் பிடிக்காது அந்த பிடிக்காத உணவுகளைக் கொண்டு பிரியாணி போலவே செய்துக் கொடுத்தால் யாரும் வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள்.
அந்தவகையில் தக்காளி சாதத்தை பிரியாணி போல செய்து கொடுக்கலாம் எப்படித் தெரியுமா?
தேவையானப் பொருட்கள்
1.தக்காளி - 4
2.பெரிய வெங்காயம் - 2
3.இஞ்சி பூண்டு விழுது
4.சமையல் எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
5.கடுகு - 1/2 ஸ்பூன்
6.உளுந்து - 1 டீஸ்பூன்
7.கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
8.சீரகம் - 1/2 டீஸ்பூன்
9.சோம்பு - 1 டீஸ்பூன்
10.பச்சை மிளகாய் - 4
11.வரமிளகாய் - 4
12.கருவேப்பிலை - ஒரு கொத்து
13மல்லித்தழை - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
14.புதினா இலை
15.உப்பு தேவையான அளவு
16.மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை
தக்காளி சாதம் செய்ய தேவையான பொருட்கள் செய்முறை முதலில் ஒரு குக்கரை எடுத்து அதை நன்கு சுத்தம் செய்து விட்டு பிறகு அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெயை ஊற்றுங்கள்.
பிறகு எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு போன்றவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.
இது பொன் நிறமாக மாறியவுடன் நீங்கள் சீரகம் சோம்பு சேர்த்து லேசாக வெடிக்க விடவும்.
பிறகு இதனோடு நீங்கள் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் வரமிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்குங்கள்.
பெரிய வெங்காயத்தை நறுக்கி அதில் போட்டு பொன்னிறமாக வதக்கும்போதே பூண்டு இஞ்சி விழுதையும் சேர்த்து பச்சை வாசம் போக வதக்கி விடுங்கள்.
பிறகு இதனோடு வெட்டி வைத்திருக்கும் தக்காளியும் உப்பையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
இவை நன்கு வதங்கிய பிறகு நீங்கள் ஒரு கொத்து கருவேப்பிலை நறுக்கி வைத்திருக்கும் புதினா இலைகளை சேர்த்து வதக்கி விடுங்கள்.
சிறிதளவு மிளகாய் தூள் போட்டு அந்த மிளகாய் தூளின் வாசம் போகும் வரை காத்திருக்கவும்.
பிறகு நீங்கள் பொடி பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை அதில் போட்டு நன்கு கலக்கி விடுங்கள்.
இதனை அடுத்து நீங்கள் எந்த அரிசியை சமைக்க விரும்புகிறீர்களோ அந்த அரிசிக்கு ஏற்றது போல நீரை சேர்த்து அதற்கு தேவையான அளவு உப்பையும் போட்டு குக்கரை மூடி விடுங்கள்.
இதனை அடுத்து இரண்டு விசில்கள் விட்டுவிட்டு குக்கரை அணைத்து விடுங்கள்.
சில அரை மணி நேரம் கழித்து உங்கள் குக்கரை ஓபன் செய்து பாருங்கள்.
சூடான சுவையான தம் பிரியாணி ஸ்டைலில் தக்காளி சாதம் தயார்.