காலையில் தினமும் சீரகம் கலந்த நீரை குடிக்கலாமா? தாறுமாறாக குவியும் மருத்துவ குறிப்புகள்
பொதுவாக சிலருக்கு 40 வயதை தாண்டும் போது எலும்புகள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். இதனால் அவர்களால் நடக்க முடியாது, பாதங்கள் எரியும், உடல் சோர்வு, கை கால் வறுத்தம், போன்ற பிரச்சினைகளை ஏற்படும்.
இதற்கு என்ன காரணம் தெரியுமா? தமது உடம்பில் போதியளவு ஊட்டசத்துக்கள் போதாமை. இதனை சரிச் செய்வற்கு பலர் ஆங்கில மருத்துவத்தை நாடுவார்கள் ஆனால் அது நமக்கான நிரந்தர தீர்வை தராது.
அந்தவகையில் வீட்டிலுள்ள முக்கிய மூன்று பொருட்களை கொண்டு எவ்வாறு எலும்பு தொடர்பான பிரச்சினைகளை சரிச்செய்யலாம் என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- கொத்தமல்லி விதைகள் ( தனியா) - 1 மேசைக்கரண்டி
- சீரகம் - 1/2 மேசைக்கரண்டி
- சோம்பு - 1/2 மேசைக்கரண்டி
- குளிர்ந்த நீர் - 1 கிளாஸ்
தயாரிப்பு முறை
முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் கொத்தமல்லி, சோம்பு, சீரகம் என்பவற்றை சேர்த்து ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.
இந்த தண்ணீரை இரவு செய்து முழுவதும் வைத்து விட வேண்டும் காரணம் என்ன என்றால், மூலிகையில் இருக்கும் ஊட்டசத்துக்கள் நன்றாக தண்ணீரில் இறங்க வேண்டும் என்பதற்காக தான். ( 8 தொடக்கம் 10 மணி நேரம்)
காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக சீரக தண்ணீரை எடுத்து நன்றாக வடிக்கட்டிக் கொள்ள வேண்டும். தற்போது முட்டுவலியை குறைக்கும் மருத்துவ நீர் தயார்!
குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
- மேற்குறிப்பிட்ட ரெசிபியை பயன்படுத்திச் செய்யப்படும் தண்ணீரை தினமும் காலையில் குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாகும். இதனால் அலற்சி பிரச்சினை, சொரி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.
- கால் வலி, உடல் சோர்வு, மயக்கம், எலும்புகளில் வலி கை கால்களில் குத்தல் போன்ற பிரச்சினைகள் காலப்போக்கில் சரிச் செய்யப்படும்.
- கல்லீரல் பிரச்சினை சரிச் செய்யப்படும்.
- சளி பிரச்சினைகள் ஏற்படாது
- உடல் சூடு காரணமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும்
முக்கிய குறிப்பு
சிறுவர்களை தவிர்த்து அனைவரும் குடிக்கலாம்.