குழந்தைகளுக்கு ஏன் வெள்ளியிலான ஆபரணங்கள் அணிகிறார்கள் தெரியுமா? சுவாரஸ்யமான பின்னணி இதோ!
பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு அதிகம் வெள்ளியிலான ஆபரணங்கள் தான் அணிந்திருப்பார்கள் ஏன் அதை அறிகிறார்கள் என்று இதுநாள் வரை நாம் கேட்டிருக்க மாட்டோம் ஆனால் அதற்குப் பின்னால் எத்தனை நன்மைகள் இருக்கிறது தெரியுமா?
குழந்தைகளுக்கு வெள்ளியிலான ஆபரணம்
குழந்தைப் பிறந்து விட்டால் அவர்களுக்கு வித விதமான ஆபரணங்கள் வாங்கிக் குவிப்பது அதிகம் அந்தவகையில் அனைவரும் பெரிதும் வாங்குவது வெள்ளியில் தான்.
குழந்தையின் கால் கைகளில் வெள்ளி வளையல், கொலுசு ஆகியவற்றை அணிவிப்பது அதிகம் அதற்கு ஜோதிட சாஸ்திரப்படி பல நன்மைகள் உள்ளதாம்.
இந்த வெள்ளி உலோகம் சந்திரனுக்கு மிகவும் தொடர்புடையதாம், அதனால் இந்த குழந்தைகளுக்கு வெள்ளி ஆபரணங்களை அணிவது ஆரோக்கியம் சிறக்கவும் சுகபோகமாக வாழவும் தான்.
குழந்தைகளின் உடலில் இருந்து கை, கால் வழியாக வெளியேறும் சக்தி வெள்ளியை அணிவிப்பதன் மூலம் அவர்களின் ஆற்றலும் சக்தியும் உடலில் இருந்து வெளியேறாமல் பாதுகாக்குமாம். மேலும் வெள்ளி அணியும் குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பார்களாம்.
அதிலும் குறிப்பாக வெள்ளி கிருமி நாசினி உலோகமாகும். இது குழந்தைகளின் நோய்களை எதிர்த்து போராட உதவும். அதுமட்டுமல்லாமல் வைரஸ்கள், பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட குழந்தைகளுக்கு துணையாக இருக்கும்.
குழந்தைகளின் கை, காலில் வெள்ளி வளையல், கொலுசுகளை அணிவித்தால் அவர்களின் மனதில் நேர்மறையான ஆற்றல் தான் இருக்கும். அவர்களுடைய மனதைக் கூர்மைப்படுத்த உதவுகிறது. இந்த குழந்தையை மனதளவில் உறுதியாகவும், மிகவும் விழிப்புடன் இருப்பார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.