பெண்கள் நகை வாங்கும் போது எப்படி பார்த்து வாங்கவேண்டும்? அழகாக இருக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா?
பெண்கள் ஆபரணங்களை வாங்குவதற்கு முன்னால் அது தங்கள் உடல் அமைப்பிற்கு பொருத்தமாக இருக்குமா என்று கவனித்து வாங்க வேண்டும். மேலும், கடைகளில் பார்க்கும்போது உங்கள் கண்களை பறிப்பதுமாக இருந்தால் மட்டும் போதாது. அணியும் போது உங்களுக்கு அது பொருத்தமாகவும் கூடுதல் அழகு தருவதாகவும் இருக்கவேண்டும்.
நீண்ட கழுத்தினை கொண்டவர்களுக்கு சோக்கர் மற்றும் கழுத்தோடு இறுக்கமாக இருக்கும் சங்கிலி, நெக்லஸ் போன்றவை அழகு தரும். பின்னர், மெல்லிய இடையை கொண்ட இளம்பெண்கள் புடவை உடுத்தும்போது இடுப்பில் வெயிஸ்ட் செயின் அணிந்துகொள்ளலாம். அவை முத்து அல்லது செயற்கை கற்கள் பதிக்கப்பட்டதாக இருந்தால் அதிக அழகுதரும்.
அடுக்குகளை கொண்ட சிறிய சங்கிலிகளை அவர்கள் அணிந்து அழகுபெறலாம். இரண்டு அல்லது மூன்று சோக்கர்களை ஒன்றாக அணிவது நீளமான கழுத்தினை கொண்டவர்களுக்கு அழகுதரும். ஜீன்ஸ், ட்ரவுசர் போன்ற மேற்கத்திய உடைகளை பெண்கள் அணியும்போது அதிக கனம்கொண்ட தங்க ஆபரணம், வளையல், கொலுசு போன்றவைகளை அணியக் கூடாது.
சிறிய தங்க சங்கிலிகள், வெள்ளி ஆபரணம், ஒயிட் கோல்டு, பிளாட்டினம் போன்றவைகளில் உருவான சங்கிலிகள் எல்லாவிதமான உடைகளுக்கும் அழகுதரும்.குண்டான உடல் அமைப்பைகொண்டவர்கள் கழுத்தோடு இறுக்கிப் பிடிக்கக்கூடிய சோக்கர் வகை ஆபரணங்களை அணிவதை தவிர்க்கவேண்டும்.