டைட்டில் வெல்லும் அருகதை அசீமிற்கு இல்லை! கண்கலங்கியவருக்கு கமல் கூறும் பதில் என்ன?
பிக்பாஸ் 6 டைட்டிலை வெல்ல அசீமுக்கு தகுதியே இல்லை என்று கமல் ஹாசனிடம் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் தெரிவித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டைட்டில் வின்னருக்கு தகுதி இல்லை
பிக்பாஸ் சீசன் 6ல் தற்போது 8 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், இன்று வெளியேறுவது ரச்சிதா என்று கூறப்படுகின்றது.
இன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் போட்டியாளர்களிடையே மனஷ்தாபத்தினை ஏற்படுத்தும் விதமாக அடுத்தடுத்து கேள்விகளை கேட்டு வருகின்றார்.
தற்போது பிக்பாஸ் டைட்டில் வின்னராக தகுதியே இல்லை என்று கூறும் நபர் குறித்து கேட்டுள்ளார். இதற்கு வீட்டில் அனைத்து போட்டியாளர்களும் அசீம் பெயரைக் கூறியுள்ளனர்.
இவ்வாறு அனைத்து போட்டியாளர்களும் தனது பெயரை கூறிய நிலையில், அசீம் எதுவும் பேசமுடியாமல் வாயடைத்துப் போன நிலையில், கண்களில் கண்ணீர் ததும்பியுள்ளது.
ஆனால் என்னதான் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் அசீமை வெறுத்து இவ்வாறு பேசினாலும், வெளியே மக்களிடையே அசீமிற்கு நல்ல வரவேற்பு கிடைப்பதுடன் அவரையே முதல் ஆளாக மக்கள் வாக்களித்து காப்பாற்றியும் வருவது குறிப்பிடத்தக்கது.