பெட்டியுடன் வந்த கமல்: வெளியேறப்போகும் போட்டியாளர் பணத்துடன் செல்வரா? டுவிஸ்ட் வைக்கும் கமல்!
பிக்பாஸ் வீட்டில் இந்தவாரம் வெளியேற்றப்படும் நபருக்கு டுவிஸ்ட் வைத்திருக்கிறார் கமல்.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் தற்போது வரை போட்டியாளர்களாலும் பிக்பாஸ் போட்டிகளாலும் சுவாரஸ்யம் குறையாமல் சென்றுக்கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சி கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை அலுப்பில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்போட்டியில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 8 போட்டியாளர்களுடன் நகர்ந்துக் கொண்டிருக்க வேளையில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் இன்றும் ஒரு போட்டியாளர் வெளியேறவுள்ளார்.
நாமினேஷன்
அந்தவகையில் இன்றைய ப்ரோமா காட்சியில், அதில் கமல் வழமையாகவே கையில் கார்ட் ஒன்றை எடுத்து வருவார். இன்றும் ஒரு கார்டுடன் வருவார் ஆனால் கார்ட்க்குள் ஒன்றும் இருக்காது.
அதனைப்பார்த்ததும் போட்டியாளர்கள் இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என நினைத்து சந்தோசப்படுவார்கள். ஆனால் வெளியேற்றப்படும் போட்டியாளர் யார் என்பதை அறிய பெட்டி ஒன்றை வைத்திருக்கிறார் கமல்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர் மைனாவா? ரக்ஷிதாவா? என்பதை அறிய போட்டியாளர்கள் மட்டுமல்ல மக்களும் ஆர்வமாகவே உள்ளனர்.
அந்தவகையில், வெளியாகியுள்ளது இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமா காட்சி.