அட்லி தனது மகனுக்கு வைத்த பெயர் யாருடையது தெரியுமா? பெயரும் காப்பியா?
இயக்குனர் அட்லி தனது மகனுக்கு வித்தியாசமான முறையில் பெயரை வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். ஆனால் அந்தப் பெயர் யாருடைய பெயர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் அட்லி
தமிழ் திரையுலகில் இரண்டு மூன்று படங்களிலேயே இயக்கி பிரபல்யமானவர் அட்லி. முதல்முறையாக ராஜா ராணி என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்திருந்தார்.
முதல் படத்தையே ஹிட் படமாக கொடுத்ததால் அடுத்த படத்தை விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து மெர்சல், பிகில் என எடுத்தப்படங்கள் எல்லாம் வெற்றியைக் கொடுத்து வந்தது. தற்போது பொலிவூட் சூப்பர் ஸ்டாரை வைத்து ஜவான் என்றப் படத்தையும் இயக்கி வருகிறார்.
குழந்தைக்கு வைத்த பெயர்
அட்லி 2014ஆம் ஆண்டு துணை நடிகையாக நடித்த கிருஷ்ண பிரியாவை திருமணம் செய்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பிரியா கர்ப்பமாக இருப்பதாக டுவிட்டர் மூலம் அறித்திருந்தார்.
அந்தவகையில் இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தநிலையில் குழந்தைக்கு “மீர்” என்றப் பெயரை வைத்திருக்கிறார்கள். இந்தக் குழந்தையின் பெயரும் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.
ஏனெனில் இந்தப் பெயர் ஷாருக்கானின் தந்தையின் பெயராகும். மீர் தாஜ் முகமது கான் என்றப் பெயரில் மீர் என்பதைத் தான் வைத்திருக்கிறார். இந்தப் பெயருக்கு தலைவன், கடவுள் என்றுப் பொருளாம்.
Yes the name is MEER ❤️
— Priya Mohan (@priyaatlee) May 7, 2023
Very happy to be revealing our little angels name ❤️?? #meer #babyboy @Atlee_dir https://t.co/RuOb1EUSnP pic.twitter.com/3s2IOiKY76
இதனால் அட்லியை பெயரையும் காப்பிதான் அடிப்பீங்களா? என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.