அட்லியின் நிறத்தை வைத்து அசிங்கப்படுத்திய நபர்! நடந்தது என்ன?
பிரபல இயக்குநர் அட்லியை விமான நிலையத்தில் வைத்து அவரின் நிறத்தை சுட்டிக்காட்டி கலாய்த்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமாவில் பெற்ற வெற்றிகள்
தமிழ் சினிமாவில் முன்னணி -இயக்குனராக இருக்கும் சங்கரின் மூலம் சினிமாவில் தான் ஒரு இயக்குநராக அறிமுகமாகி, குறுகிய காலத்தில் பிரபல்யமடைந்தவர் தான் இயக்குநர் அட்லி.
மேலும் ஒரு திரைப்பட இயக்குநர் மட்டுமல்ல திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றி வருகிறார். அட்லி முதல் முதலில் நயன்தாரா, ஆர்யா, நஸ்ரியா, என முன்னணியிலிருந்த நடிகர்களை வைத்து “ராஜா ராணி” என ஒரு காதல் படத்தை இயக்கினார்.
இந்த படம் இயக்குநர் அட்லியை சினிமாவிற்கு ஒரு அறிமுகம் கொடுத்தது. இன்றும் இந்த திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து அடுத்த படமே இளைய தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்கள் கொடுத்து பிரபல்யமடைந்து விட்டார்.
இவரின் படங்கள் எல்லாம் copy cut என பல சர்ச்சைகள் எழுந்தாலும் இது குறித்து இவர் எந்தவிதமான கவலையும் இல்லாமல் இன்னும் முன்னேறி கொண்டே தான் இருக்கிறார்.
மேலும் அட்லியின் திரைப்படத்தில் ஆக்ஷன், ரொமன்ஸ், சென்டிமென்ட் என எல்லா காட்சிகளும் ஒரு கலவையாக இருக்கும். அந்தளவு தற்கால சமூகத்தை தெரிந்து வைத்திருக்கிறார்.
வட இந்திய புகைப்பட கலைஞரிடம் கலாய் வாங்கிய அட்லி
இந்த நிலையில் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஷாருக்கான் நடிக்கும் “ஜவான் ” என்ற திரைப்பட படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு ஆகிய முக்கிய நடிகர்களும் நடிப்பதாக சில தகவல்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அட்லி ஷீட்டிங்கிற்காக அடிக்கடி வெளியில் சென்று வருகிறார்.
இதன்படி, சமிபத்தில் சென்னையில் இருந்து மும்பை புறப்படுவதற்காக தனியார் விமான நிலையம் ஒன்றிற்கு ஷாருக்கானுடன் வந்து இருந்தார்.
அப்போது அங்கு இருந்த வட இந்திய புகைப்பட கலைஞர்கள் சிலர் “இட்லி சார், இட்லி சார்” என அழைத்து கிண்டல் செய்தார்கள். அதில் ஒருவர் அட்லியை பார்த்து “இவ்ளோ கருப்பா இருக்கான் தெரியவே இல்ல” என கூறியுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த ரசிகர்கள் குறித்து கொந்தளித்துள்ளார்கள்.