இயக்குநர் அட்லியின் மகன் பெயரை உளறிய பொலிவுட் பிரபலம்: வைரலாகும் டுவிட்டர் போஸ்ட்
இயக்குநர் அட்லி அணைவரும் மிரண்டு போகும் அளவிற்கு இரண்டு எழுத்தில் குழந்தைக்கு பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லி. இதனை தொடர்ந்து தற்போது “ஜவான்” என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்கையில் அட்லி - பிரியா தம்பதியினருக்கு சுமார் 9 வருடங்களுக்கு பின்னர் கடந்த மாதங்களில் தான் அழகிய ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது.
தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கும், பிரபலங்களுக்கும் அறிவித்திருந்தார்கள். ஆனாலும் குழந்தையின் பெயர் அவர்கள் கூறவில்லை.
அட்லியின் மகன் பெயரை உலறிய ஷாருக்
இதனை தொடர்ந்து “ஜவான்” திரைப்படத்தில் நடிக்கும் ஷாருக்கானிடம் இயக்குநர் அட்லி தொடர்பில் அப்டேட் கேட்டுள்ளார்கள்.
அப்போது ஷாருக்கான், “அட்லி ரொம்ப ஸ்மார்ட். கடினமாக உழைக்கக் கூடியவர். அவருக்கு மீர் என்ற அழகான குழந்தை உள்ளது. மேலும் பிரியா எனக்கு நல்ல உணவளித்தார்.” என பதிலளித்துள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா அவர்களுடைய குழந்தையுடன் கோயிலில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, அதற்கு கீழ், “ஆமாம் எங்களது குழந்தையின் பெயர் மீர்” என பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த ரசிகர்கள்,“நீங்கள் சரி இரண்டு எழுத்தில் பெயர் வைத்தீர்களே.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
Yes the name is Meer
— atlee (@Atlee_dir) May 7, 2023
Need all ur love ,blessing and prayers https://t.co/ht4YIOj7ib