குழந்தை பிறந்த கையோடு புது வீடு வாங்கிய அட்லி! எத்தனை கோடி தெரியுமா?
குழந்தை பிறந்த கையுடன் இயக்குநர் அட்லி புது வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லி.
இதனை தொடர்ந்து தற்போது “ஜவான்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்கையில் அட்லி - பிரியா தம்பதியினருக்கு சுமார் 9 வருடங்களுக்கு பின்னர் கடந்த மாதங்களில் தான் அழகிய ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது.
தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கும், பிரபலங்களுக்கும் அறிவித்திருந்தார்கள். ஆனாலும் குழந்தையின் பெயர் அவர்கள் கூறவில்லை.
இதனை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் அட்லியின் குழந்தை பெயர் மீர் என சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
அட்லீயின் புதிய வீடு
இந்த நிலையில், இயக்குனர் அட்லீ 38 கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்த வீட்டை வாங்கியது தன்னுடைய குழந்தையின் அதிஷ்டம் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
எனினும், மும்பையில் வீடு வாங்கியது குறித்து இயக்குநர் அட்லீ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.