ஷாருக்கான் அவசரமாக நயனின் வீட்டிற்கு வர இது தான் காரணமாம்! பரபரப்பு தகவல்
திடீரென நடிகை நயன்தாரா வீட்டிற்கு ஷாருக்கான் விஜயம் செய்துள்ள தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் ஆரம்பத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான “ஐயா” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தான் அறிமுகமானார்.
இவரின் நடிப்பை பார்த்து சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படம் தான் நயனிற்கு ஒரு அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. இதனை தொடர்ந்து தமிழில் முன்னணியில் இருக்கும் அஜித், விஜய் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.
ஆனாலும் சினிமாவிலிருந்து விலகவில்லை சமிபத்தில் இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் “கனெக்ட்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை நயன் மற்றும் விக்னேஷ்சிவன் இணைந்த தயாரிப்பு நிறுவனமான “ரவுடி பிக்சர் நிறுவனம்” தயாரித்துள்ளது.
ஷாருக்கான் நயனின் வீட்டிற்கு வர என்ன காரணம்?
இந்த திரைப்படம் ஒரு த்ரில்லர் திரைப்படம் என்பதால் சற்று விறுவிறுப்பாகச் செல்கிறது. இந்த திரைப்படமும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது அட்லி இயக்கும் “ஜவான் ” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஷீட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்துக்கொண்டிருக்கிறது.
இப்படி ஒரு நிலைமையில் ஷாருக்கான் நயனின் குழந்தைகளை பார்ப்பதற்கு திடீரென நயனின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது நயன் ஷாருக்கானை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள்,“ நயனின் குழந்தைகளை திடீரென ஷாருக்கான் வந்து பார்க்கும் அளவிற்கு என்ன ஆட்ச்சி?” என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.