பூனையின் படுக்கையை கைப்பற்றி கெத்தாக போஸ் கொடுத்த ஆமை! அந்த கூத்தை நீங்களே பாருங்க..
பூனையின் படுக்கையில் படுத்து கொண்டு பூனைக்கு இடம் கொடுத்த ஆமையின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வேடிக்கை காட்சிகள்
பொதுவாக சமூக வலைத்தளங்களை திறக்கும் போது அதில் எண்ணற்ற விலங்குகளின் வேடிக்கை வீடியோக்கள் தான் நிறைந்திருக்கும்.
இதனை பார்த்து கொண்டிருக்கும் போது நேரம் போறதே தெரியாது.
இதனால் இந்த வீடியோக்களுக்கு உலகளாவிய ரீதியில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அந்தவகையில், பூனையொன்று அதன் படுக்கை படுத்திருக்கிறது. அப்போது அங்கு வந்த ஆமை, பூனையின் படுக்கையின் மேல் ஏறி படுத்து கொள்கின்றது.
பல முயற்சி செய்து படுக்கை மீட்ட பூனை
இதனால் கடுப்பான பூனை ஆமையை நகர்த்துவதற்கு பல முறை முயற்சி செய்கின்றது. ஆனால் ஆமை நகருவது போல் தெரியவில்லை.
பல முறை முயற்சி செய்து ஒரு வழியாக ஆமை நகர்த்தி கொஞ்ச இடத்தை பிடித்து படுத்து கொள்கின்றது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள்,“ இது என்னடா ஆமை இப்படியும் வேலை செய்யுமா? ”என தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
Tortoise vs cat.. ? pic.twitter.com/Olo8sBYzGp
— Buitengebieden (@buitengebieden) May 21, 2023